தீவின் மத்திய பகுதிகளிலும் பழைய நகர மையங்கள் சில வற்றிலும் சேதமடைந்துள்ள நடைபாதைகள் பழுதுபார்க்கப் பட்டு, அது பாதசாரிகளின் பயன்பாட்டுக்குப் பாதுகாப்பாக உள்ளனவா என்பது உறுதி செய்யப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரி வித்தது.
அந்தப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி கோரும் நடவடிக்கையை ஆணையம் இம்மாதம் 14ஆம் தேதி நடத்தியது. அது சிங்கப்பூர் நடைபாதைகளில் ஐந்து விழுக்காட்டைப் பழுதுபார்க்கும் பணிக்கானது. அதற்கான வேலைகள் அடுத்த ஆண்டு முதலாம் காலாண்டில் தொடங்கி, 2016 நான்காம் காலாண்டில் முடிவடையும்.
"வாட்டர்லூ ஸ்திரீட், ஜாலான் புக்கிட் மேரா, குவீன்ஸ்வே போன்றவற்றில் உள்ள சேதம் அடைந்த நடைபாதைகள் பழுது பார்ப்புக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. அதிக சேதமடைந்துள்ள நடைபாதைகளைப் பழுது பார்ப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்," என்று ஆணையத்தின் பேச்சாளர் கூறினார்.

