செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
3838c917-a328-460d-b3bd-8103b8596d88
-

முதியோருக்கு உதவ மருத்துவ உதவியாளர்கள் தேவை

கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பிறகு உங்களை வீட்டுக்கு அழைத்துச் செல்ல உங்கள் குடும்பத்தினருக்கு முடியவில்லை என்றால், நீங்கள் மெடிக்கல் எஸ்கோட்ஸ் எனும் மருத்துவ உதவியாளரின் சேவையை நாடலாம். சிங்கப்பூரின் மூப்படைந்துவரும் மக்கள் தொகை சமூகத் தில், மருத்துவ உதவியாளர் சேவையின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. மருத்துவ உதவியாளர்கள் முதியோரை அவர்களின் வீட்டிலிருந்து அழைத்துச் சென்று, மருத்துவரைப் பார்த்து முடிக்கும்வரை அவர் களுடன் இருந்து, பின்னர் அவர்களைப் பாதுகாப்பாக வீட்டுக்குத் திரும்ப அழைத்து செல்கின்றனர். இந்தச் சேவையை தொண்டூழிய நல்வாழ்வு அமைப்புகள், சமூக அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் ஆகியவை வழங்கு கின்றன.

"சுகாதார அமைச்சின் அங்கீகாரத்துடன் 13 மருத்துவ உதவியாளர், போக்குவரத்து (எம்இடி) சேவை நிறுவனங் கள் இந்தச் சேவையை வழங்குகின்றன. எம்இடி சேவையைப் பயன்படுத்தும் விகிதம் அண்மை ஆண்டு களில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் மாதத்துக்கு 2,800 சேவைகள் இடம் பெற்றன," என்று அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

"மூப்படைந்து வரும் மக்கள் தொகை இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். உடல் உபாதைகள் உள்ள முதியோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால், மருத்துவரின் தொடர் கண்காணிப்பும் தேவைப்படுகிறது," என்று அவர் விவரித்தார்.

இரைப்பைப் புற்றுநோயாளிகளின் கதிரியக்க சிகிச்சைக்கு உதவும் 'மாத்திரை'

இரப்பைப் புற்றுநோயாளிகளின் கதிரியக்க சிகிச்சைக்கு உதவும் இயந்திரவியல் பாகங்களை உள்ளடக்கிய 'மாத்திரை' (படம்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நோயாளிகள் உட்கொள்ளும் இந்த மாத்திரை துல்லிய அளவிலான கதிரியக்கம் மூலம் உடலுக்குள் உள்ள புற்றுநோய் அணுக்களை அழிக்கும். இதற்குமுன் அதிக சக்திவாய்ந்த கதிரியக்கத்தைக் கொண்டு புற்றுநோய் அணுக்கள் அழிக்கப்பட்டன.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (என்யுஎஸ்) வேதியியல் துறை அறிவியலாளர்கள் குழு, என்யுஎஸ் யோங் லூ லின் மருத்துவப் பள்ளியின் ஆய்வாளர்கள், சீனாவின் சிங்ஹுவா பல்கலைக்கழகம், ஷென்சென் மேம்பட்ட தொழில்நுட்பக் கழகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால், ஒரு டோசிமீட்டரை இந்த மாத்திரைக்குள் உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளது. 1.8 செண்டிமீட்டர் நீளமும் 0.7 செண்டிமீட்டர் அகலமும் கொண்ட இந்த மாத்திரை, சந்தையில் விற்கப்படும் மிகச் சிறிய வடிவங் களில் ஒன்று என்று கூறினார் இந்தத் திட்டத்துக்குத் தலைமையேற்ற என்யுஎஸ் பேராசிரியர் லியு சியாவ்காங்.

வளரும் புதிய நிறுவனங்களுக்கான

ஆதார நிதி உதவி 28% சரிவு

சிங்கப்பூரில் வளர்ந்துவரும் புதிதாகத் தொடங்கப்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் கடந்த ஆண்டில் US$253 மில்லியன் (S$338 மில்லியன்) தொகையைத் திரட்டின. இது 2021ல் திரட்டப்பட்ட தொகையைவிட 28.1% குறைவு. 2021ல் திரட்டப்பட்ட தொகை US$352 மில்லியன் என்று அரசாங்கத்துக்குச் சொந்தமான தொழில்நுட்ப முதலீட்டா ளரான எஸ்ஜி இன்னோவேட் தெரிவித்தது.

கடந்த ஆண்டு நிதியாதரவு அளிக்கும் 48 ஒப்பந்தங் கள் செய்துகொள்ளப்பட்டன. இது 2021ஐ காட்டிலும் 17.2% குறைவு. 2021ல் 58 ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப் பட்டன. கடந்த ஆண்டின் நிலையற்ற பொருளியல் நிலைமையே இதற்குக் காரணம் என்று எஸ்ஜி இன்னோவேட் நேற்று தனது அறிக்கையில் தெரிவித்தது.

மோசமான பொருளியல் சூழ்நிலையில், ஆதார நிதி ஆதரவின் சராசரி அளவு நீடித்த நிலைத்தன்மை, வேளாண் உணவு, மேம்பட்ட உற்பத்தி ஆகிய மூன்று முக்கிய துறைகளில் சரிந்தது. இவ்வேளையில், சுகாதாரம், உயிர் மருத்துவ அறிவியல் துறை தொடர் பான புதிய நிறுவனங்கள் ஆதார நிதியாக US$5.2 மில்லியனைக் கடந்த ஆண்டு திரட்டியது. அது 2021ல் திரட்டப்பட்ட நிதியான US$2.1 மில்லியனைவிட இரண்டு மடங்காகும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.