தொற்றுநோய்களுக்கான நிலையத்தின் புதிய தலைவர்

தொற்றுநோய்களுக்கான நிலையத்தின் புதிய தலைவர்

1 mins read
03fc2275-79d6-455e-ab03-bd43150ea5a0
-

பொதுச் சுகா­தார நிபு­ணர் பேரா­சி­ரி­யர் வெர்­னன் லீ (இடது படம்), தொற்­று­நோய்­க­ளுக்­கான தேசிய நிலை­யத்­தின் புதிய தலை­வ­ராக அறி­விக்­கப்­பட்­டுள்­ளார். அவர் அந்­தப் பொறுப்பை ஜூலை 1ஆம் தேதி முதல் வகிப்­பார் என்று தேசிய சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக் குழு­மம் நேற்று தெரி­வித்­தது.

சுகா­தார அமைச்­சில் தொற்று­நோய் பிரி­வின் மூத்த இயக்­கு­நரா­கப் பணி­யாற்­றும் பேரா­சி­ரி­யர் லீ, தொற்­று­நோய்­க­ளுக்­கான தேசிய நிலை­யத்­தின் தற்­போதைய தலை­வ­ரான பேரா­சி­ரி­யர் லியோ யீ சின்­னி­ட­மி­ருந்து (வலது படம்) அந்­தப் பொறுப்­பை ஏற்றுக்­கொள்­வார். அத்­து­டன் சுகா­தார அமைச்­சில் அவர் வகிக்­கும் பத­வி­யை­யும் பேரா­சி­ரி­யர் லீ தக்­க­வைத்­துக்கொள்­வார்.

கடந்த ஆறு ஆண்­டு­க­ளாக தொற்­று­நோய்­க­ளுக்­கான தேசிய நிலை­யத்­தின் தலை­வ­ராக உள்ள பேரா­சி­ரி­யர் லியோ, சுகா­தார அமைச்­சில் மூத்த மருத்­துவ ஆலோ­ச­க­ரா­க­வும் தேசிய சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக் குழு­மத்­தில் மூத்த ஆலோ­ச­க­ரா­க­வும் ஜூலை 1ஆம் தேதி முதல் பெற்­றுப்­பேற்­றுக்கொள்­வார்.

"மிகச் சிறந்த பங்களிப்பை சிங்கப்பூரிலும் அனைத்துலக அளவிலும் நல்கிய பேராசிரியர் லியோவுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். புதிய பொறுப்புக்கு பேராசிரியர் லீயை வரவேற்கிறோம்," என்றார் சுகாதாரப் பராமரிப்புக் குழுமத்தின் தலைமை நிர்வாகி பேராசிரியர் ஃபிலிப் சூ.