43 உணவுக் கடைகளுக்கு விதிமீறல் தொடர்பில் எச்சரிக்கை

43 உணவுக் கடைகளுக்கு விதிமீறல் தொடர்பில் எச்சரிக்கை

1 mins read
bad25b9c-3dfb-40f6-b33e-7b08589b6899
-

சிங்­கப்­பூர் உணவு அமைப்­பின் அம­லாக்க அதி­கா­ரி­கள் நடத்­திய சோத­னை­யின்­போது 43 உண­வுக் கடை­க­ளுக்கு எழுத்து­பூர்­வ­மான எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

அந்­தக் கடை­க­ளின் ஊழி­யர்­கள் உணவு தயா­ரிக்­கும்­போது முகக்­க­வ­சமோ எச்­சில் படா­மல் தடுப்­ப­தற்­கு­ரிய கவ­சத்­தையோ அணி­யா­மல் வேலை செய்­ததை அதி­கா­ரி­கள் கண்­டு­பி­டித்­த­னர்.

சென்ற மாதம் 29ஆம் தேதிக்­கும் இம்­மா­தம் 14ஆம் தேதிக்­கும் இடை­யில் அந்த அம­லாக்க நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டது.

மொத்­தம் 451 கடை­கள் சோத­னை­யி­டப்­பட்­ட­தா­க­வும் அவற்­றில் பெரும்­பா­லா­ன­வற்­றில் முகக்­க­வ­சம் அணி­வது தொடர்­பான விதி­மு­றை­கள் சரி­யா­கக் கடைப்­பி­டிக்­கப்­பட்­ட­தாக சிங்­கப்­பூர் உணவு அமைப்பு கூறி­யது.

விதி­மீ­றல் கண்­ட­றி­யப்­பட்ட 43 கடை­க­ளின் உரி­மை­யாளர்­க­ளுக்கு இது முதல்­முறை என்­ப­தால் எச்­ச­ரிக்கை மட்­டும் விடுக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­க­வும் மீண்­டும் விதி­மீ­றல் குறித்­துத் தெரி­ய­வந்­தால் கடு­மை­யான அப­ரா­தம் விதிக்­கப்­படும் என்­றும் கூறப்­பட்­டது.

உரி­மம் தொடர்­பான விதி­கள் மீறப்­பட்­டால் உண­வுக்­கடை உரி­மை­யா­ளர்­க­ளுக்கு $10,000 வரை­யி­லான அப­ரா­தத்­து­டன் ஓராண்டு வரை­யி­லான சிறைத்­தண்­டனை விதிக்­கப்­ப­ட­லாம்.

மேலும் அவர்­க­ளது உரி­மங்­கள் தற்­கா­லி­க­மா­கவோ நிரந்­த­ர­மா­கவோ ரத்து செய்­யப்­ப­டக்­கூடும்.

2020ஆம் ஆண்டு ஏப்­ரல் மாதத்­தி­லி­ருந்து உண­வுக் கடை­களில் உண­வைக் கையாள்­வோர் முகக்­க­வ­சம் அல்­லது வேறு ஏதா­வது தடுப்­பு­களை அணி­வது கட்­டா­யம்.

தும்­மி­னாலோ இரு­மி­னாலோ உண­வு­கள் மீது எச்­சில் படா­மல் பாது­காப்­பது அதன் நோக்­கம்.

உண­வ­கங்­கள், இரவு நேரக் கேளிக்கை விடு­தி­கள், வீதி­யோர உண­வுக்­க­டை­கள், காப்­பிக் கடை­கள், தற்­கா­லிக உண­வுக்­கூ­டங்­கள் போன்­ற­வற்­றிற்­கும் இது பொருந்­தும்.