'கடல்துறை நிறுவனங்கள் திறனாளர் சேர்க்கை, மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும்'

'கடல்துறை நிறுவனங்கள் திறனாளர் சேர்க்கை, மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும்'

2 mins read
8387f329-b119-4504-903f-108369870674
-

சிங்­கப்­பூ­ரின் கடல்­துறை நிறு­வனங்­கள், கரிம நீக்­கம், மின்­னி­லக்­க­ம­ய­மா­தல் போன்ற அம்­சங்­களி­லும் அவை தொடர்­பான இலக்­கு­களை எட்­டு­வ­தற்­கு­ரிய திற­னா­ளர்­களை மேம்­ப­டுத்­து­வ­தி­லும் தொடர்ந்து கவ­னம் செலுத்த வேண்­டும் என்று போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன் வலி­யு­றுத்­தி­யுள்­ளார். உட­ன­டிச் சிக்­கல்­க­ளைக் கையா­ளும் நிலை­யிலும் அந்த இலக்­கு­களில் கவ­னம் செலுத்த வேண்­டும் என்­றார் அவர்.

உல­க­ளா­விய பொரு­ளி­யல் மந்­த­நிலை, புவி­சார் அர­சி­யல் தொடர்­பான பிரச்­சி­னை­கள் போன்­றவை துறை­மு­கம், கப்­பல் போக்­கு­வ­ரத்து, தள­வா­டத் துறை ஆகி­ய­வற்­றின் மீள்­தி­ற­னைச் சோதிக்க வல்­லவை என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூர் கடல்­துறை வாரம் 2023ன் தொடக்க நிகழ்ச்­சி­யில் நேற்று அவர் உரை­யாற்­றி­னார்.

உட­ன­டிச் சவால்­க­ளைச் சமா­ளிக்­கும்­போதே நீண்­ட­கா­லக் கடப்­பா­டு­களை மறந்­து­வி­டக்­கூடாது என்று கூறிய அமைச்­சர், பாது­காப்­பான, கூடு­தல் திறன்­மிக்க, நீடித்த நிலைத்­தன்­மை­யுடன்­கூ­டிய கடல்­து­றையை உரு­வாக்­கு­வது அவ­சி­யம் என்­றார்.

சிங்­கப்­பூர் கடல்­துறை, துறை­முக ஆணை­யம் 27வது முறை­யாக ஏற்­பாடு செய்­துள்ள நிகழ்ச்­சி­யில் 20,000 பேர் கலந்­து­கொள்­வர் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

கடல்­துறை மிகச் சிக்­க­லான சூழ­லைச் சந்­தித்­துள்­ளது என்று அமைச்­சர் ஈஸ்­வ­ரன் கூறி­னார். கொவிட்-19 தொடர்­பான பின்­னடை­வி­லி­ருந்து உல­கம் மீளத் தொடங்­கி­னா­லும் உக்­ரே­னி­யப் போரால் விநி­யோ­கச் சங்­கி­லி­யும் கப்­பல் போக்­கு­வ­ரத்­தும் மிக­வும் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பதை அவர் சுட்­டி­னார்.

அனைத்­து­ல­கப் பண நிதி­யம் இவ்­வாண்­டுக்­கான உல­கப் பொரு­ளி­யல் வளர்ச்சி 2.8 விழுக்­கா­டா­கக் குறை­யும் என்று முன்­னு­ரைத்­துள்­ளதை அமைச்­சர் சுட்­டி­னார்.

கடல்­து­றைக்­குத் திற­னா­ளர்­களை ஈர்க்க, கடல்­துறை மனித­வளக் கருத்­த­ரங்­கில் இவ்­வாண்டு இளை­யர் பிரிவு அறி­மு­கம் காண்­கிறது.

சிங்­கப்­பூ­ருக்­கும் சீனா­வுக்­கும் இடை­யில் கடல்­து­றைத் திற­னா­ளர்­கள், நிபு­ணத்­து­வப் பரி­மாற்­றத்­துக்­கான புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தம் கையெ­ழுத்­தா­கி­யுள்­ள­தாக அவர் கூறி­னார். சிங்­கப்­பூர் கடல்­துறை, துறை­முக ஆணை­ய­மும் சீ ஷங்­காய் கடல்­து­றைப் பல்­க­லைக்­கழ­க­மும் அதில் கையெ­ழுத்­திட்டு உள்­ளன.