கார் மோதியதில் 64 வயது ஆடவர் உயிரிழப்பு

கார் மோதியதில் 64 வயது ஆடவர் உயிரிழப்பு

1 mins read
d8cc4307-fb75-4388-bc8b-685507ddfc62
-

டனர்ன் சாலை­யில் டான் கா கீ ரயில் நிலை­யத்­திற்கு அருகே, நேற்று முன்­தினம் நடந்து சென்­ற­வரை கார் மோதி­ய­தில் 64 வயது ஆட­வர் உயி­ரி­ழந்­தார்.

டனர்ன் சாலை-வாட்­டன் எஸ்­டேட் சாலைச் சந்­திப்­பிற்கு அருகே நடந்த விபத்து குறித்து நேற்று முன்­தி­னம் பிற்­ப­கல் இரண்டு மணிக்­குத் தக­வல் கிடைத்­த­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை கூறி­யது.

சம்­பவ இடத்­தி­லேயே ஆட­வர் மாண்­ட­தாக மருத்­துவ உத­வி­யா­ளர்­கள் தெரி­வித்­த­னர்.

காரை ஓட்­டிய 44 வயது ஆட­வர் டான் டோக் செங் மருத்­து­வ­மனைக்­குக் கொண்­டு­செல்­லப்­பட்­டார். நேற்று அவர் கைது செய்­யப்­பட்­ட­தா­கக் காவல்­துறை தெரி­வித்­தது.

காரில் பய­ணம் செய்த நான்கு வய­துச் சிறு­வ­னும் மூன்று வய­துச் சிறு­மி­யும் கேகே மக­ளிர், சிறார் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்­டு­செல்­லப்­பட்­ட­னர்.

விபத்­தை­ய­டுத்து நேற்று முன் தினம் பிற்­ப­கல் 3.30 மணி­ய­ள­வில் அங்கு பெரிய அள­வி­லான வாகன நெரி­ச­லைக் காண முடிந்­த­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறி­யது.

விசா­ரணை தொடர்­கிறது.