'சிங்கப்பூரின் நீதித்துறையை பிரான்சன் அவமதித்துள்ளார்'

'சிங்கப்பூரின் நீதித்துறையை பிரான்சன் அவமதித்துள்ளார்'

2 mins read
276a1334-be84-4a3e-b8d9-81d9ee27a4cd
-

சிங்­கப்­பூ­ரின் நீதித்­து­றையை பிரிட்­டிஷ் செல்­வந்­தர் ரிச்­சர்ட் பிரான்­சன் அவ­ம­தித்­தி­ருப்­ப­தாக உள்­துறை அமைச்சு தெரி­வித்­துள்­ளது. போதைப்­பொ­ருள் கடத்­தல்­கா­ரர் ஒரு­வர் தொடர்­பாக அவர் தெரி­வித்­தி­ருத்­தி­ருந்த கருத்­து­களை அமைச்சு சுட்­டி­யது.

சிங்­கப்­பூ­ரில் போதைப்­பொருள் குற்­ற­வா­ளி­க­ளுக்கு விதிக்­கப்­படும் மரண தண்­ட­னைக்கு எதி­ராக திரு பிரான்­சன் தமது வலைத்­த­ளத்­தில் கருத்து தெரி­வித்­தி­ருந்­தார்.

1017.9 கிராம் கஞ்சா கடத்­தி­ய­தற்­காக சிங்­கப்­பூ­ர­ரான 46 வயது தங்­க­ராஜு சுப்­பை­யா­வுக்கு 2018ஆம் ஆண்­டில் மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

தங்­க­ரா­ஜு­வுக்கு விதிக்­கப்­பட்ட மரண தண்­ட­னையை நிறுத்தி­வைக்க தாக்­கல் செய்­யப்­பட்ட மனுவை நீதி­மன்­றம் நேற்று முன்­தி­னம் நிரா­க­ரித்­தது.

தங்­க­ராசு சுப்­பையா ஏன் இறக்­கக்­கூ­டாது எனும் தலைப்­பில் திரு பிரான்­சன் வலைத்­தளத்­தில் தமது கருத்­து­க­ளைப் பதி­விட்­டார்.

"தங்­க­ராசு சுப்­பையா தொடர்­பான வழக்­கைப் பற்றி விவா­திக்­கும் நோக்­கில் அந்த வழக்­கைப் பற்றி சிங்­கப்­பூர் நீதி­மன்­றத்­துக்­குத் தெரிந்­தி­ருப்­ப­தை­விட தமக்கு அதி­கம் தெரி­யும் என்­பது போல கருத்­து­ரைத்­துள்­ளார். இந்த வழக்கு தொடர்­பாக சிங்­கப்­பூர் நீதி­மன்­றம் மூன்று ஆண்­டு­க­ளுக்­கும் அதி­க­மாக மிக உன்­னிப்­பா­க­வும் முழு­மை­யா­க­வும் ஆராய்ந்­துள்­ளது.

"திரு பிரான்­ச­னின் இச்­செ­யல் சிங்­கப்­பூ­ரின் நீதி­ப­தி­க­ளை­யும் நீதித்­து­றை­யை­யும் அவ­ம­திக்­கும் வகை­யில் உள்­ளது.

"மரண தண்­டனை விதிக்­கும் அள­வுக்கு தங்­க­ராஜு குற்­றம் புரி­ய­வில்லை என்­றும் எந்த ஒரு குற்­றத்­தை­யும் செய்­யாத ஒரு­வரை சிங்­கப்­பூர் கொல்ல இருப்­ப­தா­க­வும் திரு பிரான்­சன் தெரி­வித்­துள்­ளார். இது முற்­றி­லும் உண்­மை­யற்ற வாதம்.

"தங்­க­ராஜு கைது செய்­யப்­பட்­ட­போது அவ­ரி­டம் போதைப்­பொ­ருள் இல்லை என்று வாதி­டப்­ப­டு­கிறது. ஆனால் போதைப்­பொ­ரு­ளைக் கடத்­தும் நோக்­கு­டன் அதன் விநி­யோ­கத்தை அவர்­தான் ஒருங்­கி­ணைத்­தார் என்­பதை ஆதா­ரங்­கள் தெள்­ளத் தெளி­வா­கக் காட்­டு­கின்­றன," என்று உள்­துறை அமைச்சு தெரி­வித்­தது.

கஞ்சா விநி­யோ­கத்­தில் ஈடு­பட்ட இரு­வ­ரு­டன் தொடர்­பு­கொள்ள தங்­க­ரா­ஜு­வின் தொலை­பேசி எண் பயன்­ப­டுத்­தப்­பட்­டதை அமைச்சு சுட்­டி­யது.

அந்த இருவருடன் தாம் தொடர்புகொள்ளவில்லை என்று தங்கராஜு தெரிவித்தது நம்பக்கூடியதாக இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது.

தங்கராஜு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதை நிரூபிப்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இருப்பதாக உயர் நீதிமன்றம் கூறியது.

உயர் நீதி­மன்­றம் சரி­யான தீர்ப்பு அளித்­த­தாக பிறகு மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­ற­மும் தெரி­வித்­த­தாக உள்­துறை அமைச்சு கூறி­யது.

உயர் நீதி­மன்­றம், மேல்­மு­றை­யீட்டு நிதி­மன்ற வழக்கு விசா­ர­ணை­களின்­போது தங்­க­ரா­ஜுவை அவ­ரது வழக்­க­றி­ஞர் பிர­தி­நி­தித்­துத் தற்­காத்து வாதிட்­ட­தாக அமை­ச்சு தெரி­வித்­தது.

சிங்கப்பூர் விதிக்கும் மரண தண்டனைக்கு எதிராக திரு பிரான்சன் கருத்து தெரிவித்திருப்பது இது முதல்முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.