தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குறைந்த வருமான குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு $4 மி. உபகாரச்சம்பளம்

3 mins read
de76702e-19ce-458b-84a4-fc9daf2defc1
-

குறைந்த வரு­மானக் குடும்­பங்­க­ளைச் சேர்ந்த மாண­வர்­க­ளுக்கு தெமா­செக் அற­நி­று­வ­னம் உப­கா­ரச்­சம்­ப­ளங்­களை வழங்­கு­கிறது. அதன்­படி ஐந்து ஆண்­டு­க­ளுக்கு $4 மில்­லி­யன் வழங்­கப்­ப­டு­கிறது. இந்த உப­கா­ரச்­சம்­ப­ளங்­க­ளைப் பெறும் மாண­வர்­கள் உயர்க்­கல்வி முடிந்­த­தும் தெமா­செக் அற­நி­று­வனத்­தில் சேர்ந்து பணி­பு­ரி­யத் தேவை­யில்லை.

இவ்­வாண்டு தொடங்கி 2027ஆம் ஆண்டு வரை ஒவ்­வோர் ஆண்­டும் உயர்க்­கல்வி நிலை­யங்­களில் பயி­லும் 39 மாண­வர்­கள் இந்த உப­கா­ரச்­சம்­ப­ளம் மூலம் பல­ன­டை­வர். மொத்­தம் கிட்­டத்­தட்ட 200 மாண­வர்­கள் பல­ன­டை­வர்.

உபகாரச்­சம்­ப­ளம் பெறும் மாண­வர்­கள் தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கத்­தில் சேர்ந்து பயி­லும்­போது அவர்­க­ளுக்கு ஒவ்­வோர் ஆண்­டும் $3,000 வழங்­கப்­படும்.

பல­து­றைத் தொழிற்­கல்­லூரி, பல்­க­லைக்­க­ழ­கம் ஆகி­ய­வற்­றில் சேர்ந்து பயிலும் உப­கா­ரச்­சம்­ப­ளம் பெறும் மாண­வர்­க­ள் ஒவ்­வோர் ஆண்­டும் முறையே $4,000, $5,000 பெறு­வர்.

உப­கா­ரச்­சம்­ப­ளம் பெறும் மாண­வர்­க­ளின் குடும்­பங்­க­ளுக்­குத் தலா $2,000 பெறு­மா­ன­முள்ள குடும்ப அங்­கீ­கார விருது வழங்­கப்­படும்.

இந்­தத் தொகை மாண­வர்­கள் கல்வி பயி­லும் கால­கட்­ட­தத்­தில் ஒவ்­வோர் ஆண்­டும் கட்­டம்­கட்­ட­மாக வழங்­கப்­படும்.

குறைந்த வரு­மா­னக் குடும்­பத்­தைச் சேர்ந்த குடும்ப உறுப்­பி­னர் தற்­கா­லி­க­மாக வேலை செய்­வதை நிறுத்­தி­விட்டு உயர்­கல்வி கற்­கும்­போது அக்­கு­டும்­பத்­துக்கு நிதி நெருக்­கடி ஏற்­படும் என்பதால் ஆத­ரவு வழங்­கும் நோக்­கு­டன் இந்த உப­கா­ரச்­சம்­ப­ளம் வழங்­க­ப்­ப­டு­வ­தாக தெமா­செக் அற­நி­று­வ­னம் கூறு­கிறது.

உப­கா­ரச்­சம்­ப­ளத்­துக்­குத் தகுதி பெற மாண­வர்­கள் சிங்­கப்­பூ­ரர்­க­ளாக இருக்க வேண்­டும். குடும்­பத்­தின் தனி­ந­பர் மாத வரு­மா­னம் $1,875க்கும் குறை­வாக இருக்க வேண்­டும்.

நேற்று முதல் விண்­ணப்­பங்­கள் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. இந்த உப­கா­ரச்­சம்­ப­ளம் முதல்­மு­றை­யாக வழங்­கப்­ப­டு­கிறது. இவ்­வாண்­டின் பிற்­ப­கு­தி­யில் மாண­வர்­க­ளுக்கு உப­கா­ரச்­சம்­ப­ளம் வழங்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஒவ்­வோர் உப­கா­ரச்­சம்­ப­ளத்­துக்­கும் மறைந்த தொழிற்­சங்­க­வா­தி­க­ளான திரு ஜி. முத்­து­குமார­சாமி, திரு ஆர்.கே.எஸ். நாச்­சி­யப்­பன், திரு நித்­தி­யா­னந்­தன் ஆறு­மு­கம் ஆகி­யோ­ரின் பெயர் வைக்­கப்­பட்­டுள்­ளது.

கல்­விப் பாதை­யைத் தொட­ரும் குறைந்த வரு­மான குடும்­பத்­தைச் சேர்ந்­த­வர்­க­ளுக்­குக் கூடு­தல் ஊக்­கு­விப்பு தரு­வதே உப­கா­ரச்­சம்­ப­ளத்­தின் இலக்கு என்று தெமா­செக் அற­நி­று­வ­னத்­தின் திட்­டங்­கள் பிரி­வுத் தலை­வர் திரு லிம் ஹோக் சுவான் தெரி­வித்­தார்.

"குறைந்த வரு­மானக் குடும்­பங்­க­ளைச் சேர்ந்த தனி­ந­பர்­கள் நிதி நெருக்­கடி கார­ண­மாக உயர்க்­கல்வி பயில்­வ­தில் கூடு­தல் சிர­மங்­களை எதிர்­நோக்கக்­

கூ­டும்.

"தொழிற்­சங்­க­வா­தி­கள் ஜி. முத்­து­கு­மா­ர­சாமி, ஆர்.கே.எஸ். நாச்­சி­யப்­பன், நித்­தி­யா­னந்­தன் ஆறு­மு­கம் ஆகி­யோரை முன்­மாதி­ரி­யாக ஏற்­றுச் செயல்­பட மாண­வர்­களை ஊக்­கு­விக்க விரும்­பு­கி­றோம். மூவ­ரும் கல்­வி­யின் அரு­மையை உணர்ந்­த­வர்­கள். அது­மட்­டுல்­லாது, வாழ்­நாள் கற்­ற­லை­யும் ஊக்­கு­வித்­த­­வர்­கள்," என்று திரு லிம் தெரி­வித்­தார்.

திரு முத்­து­கு­மா­ர­சாமி 2019ஆம் ஆண்­டில் கால­மா­னார். அப்­போது அவ­ருக்கு 68 வயது. நாள் சம்­பள ஊழி­யர்­களுக்­கான ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட தொழிற்­சங்­கத்­தின் பொதுச் செய­லா­ள­ராக அவர் பதவி வகித்­த­வர். அந்­தத் தொழிற்­சங்­கம் 2021ஆம் ஆண்­டில் கலைக்­கப்­பட்டு பொது ஊழி­யர்­க­ளுக்­கான ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட தொழிற்­சங்­கத்­தில் இணைக்­கப்­பட்­டது.

திரு நித்­தி­யா­னந்­த­னும் திரு நாச்­சி­யப்­ப­னும் மின்­சார, எரி­வா­யுத் துறை ஊழி­யர்­க­ளுக்­கான தொழிற்­சங்­கத்­தில் இருந்­த­வர்­கள். திரு நித்­தி­யா­னந்­தன் அதன் நிர்­வா­கச் செய­லா­ள­ரா­க­வும் திரு நாச்­சி­யப்­பன் அதன் முன்­னோடி உறுப்­பி­ன­ரா­க­வும் இருந்­த­னர்.

திரு நித்­தி­யா­னந்­தன் 2007ஆம் ஆண்­டில் 57 வய­தில் கால­மா­னார். திரு நாச்­சி­யப்­பன் 2021ஆம் ஆண்­டில் 67 வய­தில் கால­மா­னார். இரண்டு தொழிற்­சங்­கங்­க­ளின் உறுப்­பி­னர்­க­ளு­டைய பிள்­ளை­க­ளுக்­காக புத்­த­கப் பரி­சு­களும் நேற்று அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டன. இவற்­றுக்கு மறைந்த மூன்று தொழிற்­சங்­க­வா­தி­க­ளின் பெயர் வைக்­கப்­பட்­டுள்­ளன.