3,500 செல்வந்தர்களுக்கு சிங்கப்பூர் குடியுரிமை என வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்தது உள்துறை அமைச்சு

3,500 செல்வந்தர்களுக்கு சிங்கப்பூர் குடியுரிமை என வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்தது உள்துறை அமைச்சு

2 mins read
9f33f89b-b1b0-4eb0-be97-a3c9a8b87158
-

வெளி­நா­டு­க­ளைச் சேர்ந்த 3,500 பணக்­கா­ரர்­கள் இவ்­வாண்டு சிங்­கப்­பூர் குடி­யு­ரிமை பெற­வி­ருப்­ப­தாக வெளி­யான செய்­தி­கள் தவ­றாக வழி­ந­டத்­து­வ­தாக உள்­ளன என்று உள்­துறை அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

அவர்கள் பெரும்­பா­லும் சீனா­வைச் சேர்ந்­த­வர்­கள் என்று சீன­மொழி நாளி­தழான சாவ் பாவ் கடந்த வியா­ழக்­கிழமை செய்தி வெளி­யிட்டு இருந்­தது. 'நியூ வோர்ல்டு வெல்த்' எனும் சொத்து நுண்­ண­றிவு நிறு­வ­னத்­தின் ஆய்­வுப் பிரி­வுத் தலை­வர் ஆண்ட்ரூ எமோ­யல்ஸ் என்­ப­வ­ரைச் சுட்டி, அச்­செய்தி வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது. அதற்கு மறு­நாள் `பிஸ்­னஸ் டைம்ஸ்' நாளி­த­ழி­லும் அது­குறித்த செய்தி வெளி­யா­கி இருந்­தது.

அப்­ப­ணக்­கா­ரர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் முத­லீட்­டுச் சொத்­தாக குறைந்­தது ஆறு மில்­லி­யன் அமெ­ரிக்க டாலரை (S$8.02) கொண்­டி­ருப்­ப­தாக அச்­செய்­தி­கள் குறிப்­பிட்­டி­ருந்­தன.

இந்­நி­லை­யில், தென்­னாப்­பி­ரிக்­கா­வின் ஜோக­னஸ்­பர்க் நக­ரைச் சேர்ந்த ஒரு தனி­யார் ஆய்வு நிறு­வ­னத்­தில் பணி­பு­ரி­யும் ஒரு­வர் மூல­மாக மேற்­கு­றிப்­பிட்ட எண்­கள் பெறப்­பட்­ட­தாக உள்­துறை அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

"எந்த அடிப்­ப­டை­யில் அவரோ அவ­ரது நிறு­வ­னமோ இப்­படி 3,500 பணக்­கா­ரர்­க­ளுக்கு சிங்­கப்­பூர் குடி­யு­ரிமை வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாக முடி­விற்கு வந்­தார் என்று தெரி­ய­வில்லை. சிங்­கப்­பூர் குடி­யு­ரி­மைக்­காக இவ்­வாண்­டில் இன்­னும் எத்­தனை விண்­ணப்­பங்­கள் பெறப்­படும் என்­பதே இன்­னும் முடி­வு­செய்­யப்­ப­ட­வில்லை," என்று அமைச்சு விளக்­க­ம­ளித்­துள்­ளது.

"நம்­பத்­த­குந்த எந்த அடிப்­படை­யு­மின்றி வெளி­யா­கி­யுள்ள இந்­தத் தக­வல் மிக­வும் தவ­றாக வழி­ந­டத்­து­வ­தாக உள்­ளது. பணக்­கா­ர­ராக இருந்­தால் குடி­யு­ரிமை கிடைத்­து­வி­டும் என்­ப­தற்கு உத்­த­ர­வா­த­மில்லை," என்று அமைச்சு குறிப்­பிட்­டது.

இவ்­வாண்­டில் சிங்­கப்­பூர் குடி­யு­ரிமை பெற­வி­ருக்­கும் பணக்­காரர்­களில் ஹாங்­காங், இந்­தியா, இந்­தோ­னீ­சியா, மலே­சியா, வியட்­னாம், பிலிப்­பீன்ஸ், பிரிட்­டன் ஆகிய நாட்­டைச் சேர்ந்­த­வர்­களும் அடங்­கு­வர் என்று திரு எமோ­யல்ஸ் கூறி­யி­ருந்­தார்.

சிங்­கப்­பூ­ருக்­குக் கிடைக்­கும் பலன்­கள், இங்கு ஏற்­ப­டுத்­தி­யுள்ள தொழில், பணி­பு­ரி­யும் சிங்­கப்­பூ­ரர்­க­ளின் எண்­ணிக்கை உள்­ளிட்ட பல கார­ணி­கள் சிங்­கப்­பூர் குடி­யு­ரி­மைக்­குக் கருத்­தில் கொள்­ளப்­படும் என்று அமைச்சு குறிப்­பிட்­டது.

அத்­து­டன், சமூ­கத்­து­டன் ஒருங்­கி­ணை­வ­தில் ஒரு­வ­ரின் தனித்­தி­ற­னும் சிங்­கப்­பூ­ரில் வேர்­விட அவர் கொண்­டுள்ள கடப்­பா­டும் கருத்­தில்­கொள்­ளப்­படும் என்­றும் அது கூறி­யது.