செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
4f5cc08d-7caa-4346-adec-20e18e959f98
-

சுமத்ராவில் நிலநடுக்கம்: சிங்கப்பூரில் அதிர்வுகள்

இந்தோனீசியாவின் சுமத்ரா தீவுக்கு மேற்குப் பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆகப் பதிவானது.

சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூர் நேரப்படி நேற்று அதிகாலை 4 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இரண்டு மணி நேரத்துக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்ட்டது.

நிலநடுக்கத்துக்குப் பிறகு பல அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் அதில் ஒன்று ரிக்டர் அளவில் 5ஆகப் பதிவானது என்றும் தெரிவிக்கப்பட்டது.

முழுநேர வேலை கிடைத்தாலும் சம்பளம் குறைவாக உள்ளது

முன்பைவிட தற்போது மேலும் பல தனியார் பல்கலைக்கழகப் பட்டதாரிகளுக்கு முழுநேர வேலை கிடைக்கிறது. கடந்த ஆண்டு பட்டம் பெற்ற தனியார் பல்கலைக்கழக மாணவர்களில் ஐந்தில் மூவருக்குப் பட்டம் பெற்ற ஆறு மாதங்களுக்குள் முழுநேர வேலை கிடைத்தது.

இருப்பினும், தன்னாட்சி பல்கலைக்கழகப் பட்டதாரிகளுடன் ஒப்பிடும்போது அவர்களது சம்பளம் குறைவாகவே இருக்கிறது என்று ஸ்கில்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பு நடத்திய தனியார் கல்விக் கழகப் பட்டதாரி வேலை வாய்ப்பு ஆய்வில் தெரியவந்துள்ளது.

2021ஆம் ஆண்டில் 46.4 விழுக்காடு தனியார் பல்கலைக்கழகப் பட்டதாரிகளுக்கு முழுநேர நிரந்தர வேலை கிடைத்தது. இந்த விகிதம் கடந்த ஆண்டு 60.9 விழுக்காடாக அதிகரித்தது.

சுரங்கப்பாதைச் சுவரில் கிறுக்கல்

எஸ்ஜிகியூஆர் குறியீட்டில் இணைக்கப்பட்ட அலிபே+

எஸ்ஜிகியூஆர் குறியீட்டில் அலிபே+ சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சிங்கப்பூருக்கு வரும் சுற்றுப்பயணிகளும் மற்ற பயனீட்டாளர்களும் இனி அலிபே+ தளத்தைப் பயன்படுத்தி ஏறத்தாழ 11,000 உணவு அங்காடி நிலைய கடைகள், காப்பிக்கடைகள், ஈரச்சந்தைகள் ஆகியவற்றில் பணம் செலுத்தலாம்.

கூடுதல் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளத் திட்டமில்லை

சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலானோர், கொவிட்-19 கிருமித்தொற்றை அபாயகரமன நோயாகக் கருதவில்லை என்று அண்மையில் நடத்தப்பட்ட YouGov ஆய்வில் தெரியவந்துள்ளது.

கூடுதல் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள திட்டமில்லை என்று ஆய்வில் பங்கெடுத்தவர்களில் 38 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.

ஆய்வில் மொத்தம் 1,100 பேர் பங்கெடுத்தனர். ஆய்வில் பங்கெடுத்தவர்களின் குறைந்தபட்ச வயது 18. 60 வயதுக்கும் மேற்பட்டோரிடமும் ஆய்வு நடத்தப்பட்டது.

கடந்த மாதம் 30ஆம் தேதியிலிருந்து இம்மாதம் 12ஆம் தேதி வரை ஆய்வு நடத்தப்பட்டது.

ஆய்வில் பங்கெடுத்தவர்களில் கிட்டத்தட்ட 100 பேருக்கு நீரிழிவுநோய், இதய நோய் அல்லது நாள்பட்ட நுரையீரல் பிரச்சினை இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிக்கும் வேளையில் ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன.