சாய வாடையால் நோய்வாய்ப்பட்ட மாணவர்கள்

சாய வாடையால் நோய்வாய்ப்பட்ட மாணவர்கள்

1 mins read
40a0b7d7-7497-4db4-a831-b04cbad6678e
-

ராஃபிள்ஸ் கல்­விக் கழக தங்கு­வி­டு­தி­யில் உள்ள அறை­க­ளின் கத­வு­க­ளுக்­குச் சாயம் பூசப்­பட்ட பிறகு அதி­லி­ருந்து வெளிப்­பட்ட வாடை சில மாண­வர்­களை நோய்­வாய்படச் செய்­த­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது.

பாதிக்­கப்­பட்ட மாண­வர்­கள் அந்த அறை­களில் தங்­கி­ இருந்தபோது கத­வு­க­ளுக்­குச் சாயம் பூசப்­பட்­ட­தாக அறி­யப்­படு­கிறது.

சாயம் பூசும் பணி­கடந்த மாதம் தொடங்­கியது. தங்­க­ளுக்கு இரு­மல், தொண்டை வலி, தலை சுற்­றல்.

காது அடைப்பு, கண் எரிச்­சல், தூக்­க­மின்மை ஆகி­யவை ஏற்­பட்­ட­தாக பீஷான் வட்­டா­ரத்­தில் உள்ள அந்­தத் தங்­கு­வி­டுதி­யில் தங்­கும் யுனோயா தொடக்­கக்­கல்­லூரி மாண­வர்­கள் நால்­வர் கூறி­ய­தாக சீன­மொழி நாளி­தழ் சாவ்­பாவ் தெரி­வித்­தது.

தமக்கு மேல் சுவா­சக்­கு­ழாய் அழற்சி ஏற்­பட்­ட­தாக மாண­வர் ஒரு­வர் கூறி­ய­தாக சாவ்­பாவ் தெரி­வித்­தது. சாயம் பூசும் பணி­கள் குறித்து தங்­க­ளி­டம் தெரி­­விக்­கப்­ப­ட­வில்லை என்று பாதிக்­கப்­பட்ட மூன்று மாண­வி­கள் கூறி­ய­தாக அறி­யப்­ப­டு­கிறது. இதற்­கி­டையே, தங்­கு­வி­டு­தி­யில் சாயம் பூசம் பணி­கள் ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ள­தாக தங்­கு­விடு­தி­யின் செய்­தித்­தொ­டர்­பாளர் தெரி­வித்­துள்­ளார்.