தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'சிங்கப்பூரில் டெங்கித் தொற்று அபாயம் அதிகமாகவே உள்ளது'

2 mins read
ead7b61d-50ab-4c71-bed9-d5258fb9bec8
-

சிங்­கப்­பூ­ரில், சென்ற ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் இந்த ஆண்­டின் முதல் நான்கு மாதங்­களில் டெங்­கிச் சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை குறைந்­த­தாக தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் தெரி­வித்­துள்­ளது.

இருப்­பி­னும் மே முதல் அக்­டோ­பர் மாதம் வரை­யி­லான கால­கட்­டம் வெப்­ப­மான வானிலை நில­வும் என முன்­னு­ரைக்­கப்­பட்டு உள்­ள­தால் டெங்­கிப் பர­வல் அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்­பதை மறுப்­ப­தற்­கில்லை.

எனவே தொடர்ந்து விழிப்­பு­டன் இருக்க வேண்­டும் என்று வாரியம் வலி­யு­றுத்­தி­யது.

இந்த ஆண்­டுத் தொடக்­கத்­தில் இருந்து இம்­மா­தம் 24ஆம் தேதி வரை­யி­லான நில­வ­ரப்­படி சிங்கப்பூரில் 2,276 டெங்­கிச் சம்­ப­வங்­கள் பதி­வா­கி­யுள்­ளன.

2023ன் முதல் காலாண்­டில் டெங்­கி­யால் யாரும் உயி­ரி­ழந்­த­தா­கத் தக­வல் இல்லை.

இவ்­வாண்­டுத் தொடக்­கத்­தில், 'ஏடிஸ்' கொசுக்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­த­தா­லும் புதிய வகை டெங்­கிக் கிரு­மிக்கு எதிரான தடுப்பாற்றல் மக்களிடம் குறைவாக இருந்ததா­லும் டெங்­கிச் சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை வெகு­வாக அதி­க­ரித்­தது. ஒரே வாரத்­தில் 194 பேர் பாதிக்­கப்­பட்­ட­னர்.

இன்னும் அந்த எண்­ணிக்கை 100க்கு­மேல் பதி­வா­வ­தாக வாரி­யம் கூறி­யது.

பல்­வேறு பகு­தி­களில் கண்­ட­றி­யப்­பட்ட 371 டெங்­கிப் பர­வல் அபா­யம் அதி­க­முள்ள இடங்­களில் கிட்­டத்­தட்ட 92 விழுக்­காட்டு இடங்­கள் இப்­போது ஆபத்து நீங்­கி­ய­வை­யாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளன.

பங்­கா­ளித்­துவ அமைப்­பு­களும் சமூ­கத்­தி­ன­ரும் நல்­கிய ஒத்­து­ழைப்பு இதில் முக்­கி­யப் பங்கு வகிப்­ப­தாக வாரி­யம் சொன்­னது.

'வோல்­பாக்­கியா-ஏடிஸ்' ஆண் கொசுக்­க­ளின் உற்­பத்தி இதில் கைகொ­டுத்­தது.

2022 செப்­டம்­ப­ரில் இருந்து வாரத்­திற்கு ஐந்து மில்­லி­யன் என்ற எண்­ணிக்­கை­யில் இக்­கொசுக்­கள் உற்­பத்தி செய்­யப்­படு­கின்­றன. இவை பெண் ஏடிஸ் கொசுக்­க­ளு­டன் கூடு­வ­தால் அவை இனப்­பெ­ருக்­கம் செய்­வது தடுக்­கப்­படும்.

இந்தத் ­திட்­டம் மேலும் விரிவு­படுத்­தப்­ப­டு­ம் என்று தேசிய சுற்றுப்புற வாரி­யம் கூறி­யது.