துறைமுக தொழில்நுட்ப ஆய்வுக்கு $24 மி. ஒதுக்கீடு

துறைமுக தொழில்நுட்ப ஆய்வுக்கு $24 மி. ஒதுக்கீடு

1 mins read
8f8afc6d-3f0b-483f-ae58-b8c4e6743c38
-

சிங்­கப்­பூர் கடல்­துறை, துறை­முக ஆணை­ய­மும் சிங்­கப்­பூர் துறை­மு­கத்தை நிர்­வ­கிக்­கும் 'பிஎஸ்ஏ சிங்­கப்­பூர்' நிறு­வ­ன­மும் அவற்­றுக்கு இடை­யி­லான 12 ஆண்­டுப் பங்­கா­ளித்­து­வத்தை மறு­உ­று­திப்­படுத்தி உள்­ளன.

துறை­மு­கத் தொழில்­நுட்ப ஆய்வு, மேம்­பாட்­டுத் திட்­டங்­களுக்கு இரு தரப்­பும் தலா $12 மில்­லி­யன் நிதியை ஒதுக்க இணக்­கம் கண்­டுள்­ளன. சிங்­கப்­பூர் கடல்­துறை வார நிகழ்ச்­சி­யில் நேற்று அதற்­கான ஒப்­பந்­தம் கையெ­ழுத்­தா­னது.

இயந்­திர மனி­த­வி­யல், மின்­னி­லக்­கத் தீர்­வு­கள், நீடித்த நிலைத்­தன்மை ஆகி­யவை தொடர்­பான ஆய்­வு­க­ளுக்கு அந்த நிதி பயன்­ப­டுத்­தப்­படும் என்று கையெ­ழுத்து நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்ட நிதி, போக்­கு­வ­ரத்து மூத்த துணை­ய­மைச்­சர் சீ ஹோங் டாட் கூறி­னார்.