மறுவிற்பனை செய்யப்படும் கூட்டுரிமை வீடுகளின் எண்ணிக்கையும் அவற்றின் விலையும் சென்ற மாதம் தொடர்ந்து இரண்டாவது மாதமாக அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாகக் கட்டப்பட்ட தனியார் வீடுகளின் விலை வெகுவாக அதிகரித்தது இதற்குக் காரணம். சென்ற மாதம் 1,133 கூட்டுரிமை வீடுகள் மறுவிற்பனை செய்யப்பட்டன. பிப்ரவரியில் அந்த எண்ணிக்கை 736.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மறுவிற்பனை செய்யப்பட்ட கூட்டுரிமை வீடுகளின் விலை 14.1 விழுக்காடு உயர்ந்தது. புறநகர்ப் பகுதியில் கூட்டுரிமை வீடுகளின் மறுவிற்பனை விலை ஆக அதிகமாக 11 விழுக்காடு கூடியது. 2022 செப்டம்பர் முதல் தொடர்ந்து நான்கு மாதங்கள் கூட்டுரிமை வீட்டு மறுவிற்பனை விலை வீழ்ச்சி கண்டது.

