'மாண்ட பொறியாளருக்கு செயற்கைக் கூரை குறித்துத் தெரியும்'

'மாண்ட பொறியாளருக்கு செயற்கைக் கூரை குறித்துத் தெரியும்'

1 mins read
9549d4fc-99c2-49a8-a03f-43cb81d2296d
-

'கேப்பிட்டாஸ்பிரிங்' கட்டடத்தில் வேலைசெய்த பொறியாளார் கரினா மோண்டன் இஸிப், சென்ற ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி, '16எம்' தளத்தில் இருந்து 30 மீட்டர் கீழே விழுந்து மாண்டார். ஒரு சென்டிமீட்டர் தடிமனான செயற்கைக் கூரைமீது ஏறியதில் அவர் ஏழு மாடிகள் கீழே விழ நேரிட்டது.

விசாரணையில், திருவாட்டி இஸிப்பிற்கு அந்தத் தளத்தில் செயற்கைக்கூரை அமைக்கப்பட்டிருப்பது குறித்துத் தெரியும் என்று தெரிவிக்கப்பட்டது. அந்தத் தளத்தில் பொதுவான பாதுகாப்பு எச்சரிக்கைக் குறிப்புகள் இருப்பதாகவும் திருவாட்டி இஸிப் செயற்கைக் கூரை குறித்து மறந்திருக்கக்கூடும் என்றும் கூறப்பட்டது.

மரண விசாரணை அதிகாரி வேறொரு நாளில் தமது அறிக்கையைச் சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.