'ஜிஎக்ஸ்எஸ்' மின்னிலக்க வங்கி குறைந்தபட்சமாக $200 கடன் தரும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
'கிரேப்', 'சிங்டெல்' நிறுவனங்கள் நடத்தும் இவ்வங்கி வசதி குறைந்தோருக்கு சேவை வழங்கும் நோக்கில் இந்த நீக்குப்போக்கான கடன் திட்டத்தை அறிவித்துள்ளது.
இரண்டு மாதங்களுக்குள் முழுவதுமோ பகுதியாகவோ கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தினால் கட்டணம் ஏதும் இல்லை.
ஆண்டுக்கு 3.8 விழுக்காடு எனும் விகிதத்தில் நாள் அடிப்படையில் வட்டி கணக்கிடப்படும். திருப்பிச் செலுத்தியதுபோக மீதமுள்ள தொகைக்கு மட்டும் வட்டி கணக்கிடப்படும் எனக் கூறப்பட்டது. தாமதமானால் ஆண்டுக்கு 18% வட்டி வசூலிக்கப்படும்.

