சிங்கப்பூரில் சம்பள உயர்வு மெதுவடையும்

சிங்கப்பூரில் சம்பள உயர்வு மெதுவடையும்

2 mins read
e5c7bd99-c02d-482c-ac12-6e15f3a9a4bb
-

சிங்­கப்­பூ­ரின் பொரு­ளி­யல் வளர்ச்சி மெது­வ­டைந்­தி­ருப்­ப­தால், சிங்­கப்­பூ­ரர்­கள், நிரந்­த­ர­வா­சி­கள் ஆகி­யோ­ரின் சம்­பள உயர்­வும் மெது­வ­டை­யும் என்று சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் தெரி­வித்து உள்­ளது.

சம்­பளங்­களும் விலை­களும் ஒன்றை ஒன்று முந்­திக்­கொண்டு செல்ல முய­லும் அபா­யம் குறைவு என்று நேற்று குறிப்­பிட்ட ஆணை­யம், அண்மைக் காலங்­களில் விலை­க­ளைக் காட்­டி­லும் சம்­ப­ளங்­கள் மெது­வாக உயர்­கின்­றன என ஆய்­வு­கள் காட்­டு­கின்­றன என்­றும் கூறி­யது.

இருப்­பி­னும், கொள்­கை­யும் நிர்­வாக அம்­சங்­களும், எந்த குறிப்­பிட்ட துறை­யில் மக்­க­ளின் சம்­ப­ளம் மெது­வ­டை­யும் என்­பதை தீர்­மா­னிக்­கும் என்­றும் ஆணை­யம் ஈராண்­டு­களில் ஒரு­முறை வெளி­யி­டும் தனது அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

படிப்­ப­டி­யாக உயரும் சம்­பள முறையில் மேம்­பா­டு­கள், அர­சாங்க சேவை ஊழி­யர்­க­ளின் சம்­பள உயர்வு, சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை, கல்­வித் துறை ஆகி­ய­வற்­றில் பணி­யாற்­றும் குறைந்த சம்­பள ஊழி­யர்­களில் வரு­வாயை உயர்த்­தும் கொள்­கை­கள், ஒட்­டு­மொத்த மக்­க­ளின் சம்­பள உயர்­வுக்கு ஆத­ர­வ­ளிக்­கும்.

சம்­பள உயர்வு பல்­வேறு துறை­க­ளுக்­கி­டையே மாறு­பட்­டி­ருக்­கும். பய­ணம் தொடர்­பான வேலை­களில் அது உயர்­வாக இருக்­கும். கட்­டு­மா­னம், சொத்துச் சந்தை, சில்­லறை விற்­பனை, உணவு பானத்­துறை ஆகி­ய­வற்­றின் சம்­பள உயர்வு, வர்த்­தகம், உற்­பத்­தித் துறை ஆகி­ய­வற்­றின் சம்­பள உயர்வைவிட சற்று குறை­வாக இருக்­கும்.

பண­வீக்­கத்­தின் தாக்­கத்­தால் உண்மை ஊதி­யத்­தின் வளர்ச்சி, அதிக வரு­வாய் ஈட்­டும் ஊழி­யர்­க­ளைக் காட்­டி­லும் குறைந்த வரு­வாய் ஈட்­டும் ஊழி­யர்­க­ளி­டம் அதிக பாதிப்பை ஏற்­ப­டுத்­தும்.

சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் மெது­வ­டை­வ­தால், தொழி­லா­ளர் சந்தை இறுக்­க­மா­கும் என்று ஆரம்­ப­கட்ட அறி­கு­றி­கள் காட்­டு­கின்­றன.

வேலை­யி­லி­ருந்து தற்­கா­லி­க­மாக விடுப்பு எடுத்­துக்­கொள்ள வற்­பு­றுத்­தப்­படும் ஊழி­யர்­க­ளின் எண்­ணிக்­கை­யும் வாரத்­துக்­குக் குறை­வான நாள்­களே வேலை செய்ய பணிக்­கப்­படும் ஊழி­யர்­களின் எண்­ணிக்­கை­யும் உயர்ந்­துள்­ளன. நான்­காம் காலாண்­டில் ஆட்­கு­றைப்பு நட­வ­டிக்­கை­யும் கொவிட்-19 பெருந்­தொற்­றுக் காலத்­துக்கு முந்­திய நிலையை அடைந்­துள்­ளது.

உய­ரந்த சம்­ப­ளம் தரும் பதவி­ க­ளுக்­காக வேலையை விட்டு புதிய வேலைக்­குத் தாவு­வோர் எண்­ணிக்கை குறைந்­துள்­ளது.

சிங்­கப்­பூர்­வா­சி­க­ளின் சம்­பள உயர்­வும் ஆண்டு அடிப்­படை­யில் நான்­காம் காலாண்­டில் 5.4% மெது­வ­டைந்­தது. மூன்­றாம் காலாண்­டில் அது 7.1% ஆக இருந்­தது. முன்­னைய காலாண்டு மற்­றும் பரு­வத்­துக்கு ஏற்­ற­வாறு சரி­செய்­யப்­பட்ட சம்­பள உயர்வு நான்­காம் காலாண்­டில் 1% மெது­வ­டைந்­தது. மூன்­றாம் காலாண்­டில் அது 1.2% ஆக இருந்­தது.

கடந்த ஆண்­டில் ஒட்­டு­மொத்த வேலை­வாய்ப்பு எண்­ணிக்கை 250,100 கூடி­யது. இது ஊழி­ய­ர­ணி­யின் விகி­தத்தை 2.9 விழுக்­கா­டாக்­கி­யது. இது கிரு­மித் தொற்­றுக்கு முந்­திய நிலை­யை­விட அதி­கம்.

சிங்­கப்­பூர்­வா­சி­க­ளின் வேலை­யில்லா விகி­தம் செப்­டம்­ப­ரில் 2.9%லிருந்து டிசம்­ப­ரில் 2.8%க்குக் குறைந்து, இவ்­வாண்­டில் முதல் இரண்டு மாதங்­களில் 2.7%க்கு மேலும் குறைந்­தது.