குடியிருப்பு வாடகை உயர்வு மெதுவடையும்

குடியிருப்பு வாடகை உயர்வு மெதுவடையும்

2 mins read
b22fa138-5834-451c-ac66-083f7b8517ea
-

குடி­யி­ருப்பு வாடகை உயர்வு வரும் காலாண்­டு­களில் மெது­வ­டை­யக்­கூ­டும்.

அதி­க­மான வீடு­கள் கட்டி முடிக்­கப்­படும் வேளை­யில் வாட­கைக்­கான தேவை­யும் மித­ம­டை­யும் என்­பதே இதற்­கான கார­ணம் என்று சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் நேற்று தெரி­வித்­தது.

குறிப்­பி­டத்­தக்க அள­வில் குடி­யி­ருப்­புத் தொகு­தி­க­ளின் கட்­டு­மா­னம் முடி­வ­டைந்­தி­ருப்­ப­தால், சிங்­கப்­பூ­ரர்­களும் நிரந்­த­ர­வா­சி­களும் தங்­கள் வாடகை வீட்­டை­விட்டு புதிய இல்­லங்­க­ளுக்­குச் செல்­லக்­கூ­டும்.

தேசிய வளர்ச்சி அமைச்சு, சிங்­கப்­பூ­ரில் வாடகை சந்தை பற்றி மேற்­கொண்ட ஆய்­வின் விவ­ரங்­கள் சிங்­கப்­பூர் நாணய ஆணை­யத்­தின் ஈராண்­டு­க­ளுக்கு ஒரு முறை வெளி­யிடப்­படும் அதன் விரிநிலைப் பொரு­ளி­யல் ஆய்­வ­றிக்­கை­யில் இடம்­பெற்­றுள்­ளன.

இவ்­வாண்டு தொடக்­கத்­தி­லி­ருந்து வாடகை வீடு­களைப் பார்­வை­யி­டு­த­லும் வீட்டு விற்­பனை குறித்து விசா­ரிப்­பு­களும் குறைந்­துள்­ளன என்று சொத்­துச் சந்தை முக­வர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

2021ஆம் ஆண்டு முதல் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீடு­க­ளுக்­கான வாடகை 38% அதி­க­ரித்­துள்­ளது. தனி­யார் வீடு­க­ளின் வாடகை 43% உயர்ந்­துள்­ளது.

2022ல் தனி­யார் தரை வீடு­க­ளுக்­கான வாடகை 28.1% உயர்ந்த நிலை­யில், கூட்­டு­ரிமை வீடு­க­ளுக்­கான வாடகை 29.8% உயர்ந்­தது.

இதற்­கி­டையே, வீவ­க­வின் ஐந்­தறை வீடு­க­ளுக்­கான வாடகை 29.5 விழுக்­கா­டும் மூவறை வீடு­களுக்­கான வாடகை 24.6 விழுக்­கா­டும் ஏற்­றம் கண்­டன.

2021 முதல் குடி­யி­ருப்பு வீடு­க­ளுக்­கான வாடகை மேல்­நோக்­கிய வேகத்­தில் சென்­ற­தற்கு, கொவிட்-19 பெருந்­தொற்று ஏற்­ப­டுத்­திய அதி­கப்­ப­டி­யான தேவை-விநி­யோ­கச் சம­நி­லை­யின்­மையே கார­ணம் என்று அறிக்கை கூறு­கிறது.

"இப்­ப­டிப்­பட்ட சந்தை சம­நி­லை­யின்மை இப்போது மெது­வ­டைய தொடங்­கி­யுள்­ளது. தொடர்ந்து அது இவ்­வாண்டும் மெது­வ­டை­யும்," என்­றும் சிங்­கப்­பூர் நாணய ஆணை­யத்­தின் அறிக்கை சொன்­னது.