தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குடிமைத் தற்காப்புப் படைக்கு விருது

2 mins read
43e0e90d-e5ab-4e3e-ad53-674e6b387ce4
-

துருக்கி நிலநடுக்கத்தில் தேடுதல், மீட்புப் பணி

இவ்­வாண்டு பிப்­ர­வரி மாதம் துருக்­கி­யில் ரிக்­டர் அளவு 7.8 பதி­வான சக்தி வாய்ந்த நிலநடுக்­கம் ஏற்பட்டது. இதன் தொடர்­பில் நடந்த தேடு­தல், மீட்­புப் பணி­களில் சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை பங்கு

பெற்­றது.

அதை அங்­கீ­க­ரித்து பாராட்டு தெரி­விக்­கும் வகை­யில் துருக்கி நாட்டு துணை அதி­பர் விருது வழங்­கி­யுள்­ள­தாக குடி­மைத் தற்­காப்­புப் படை நேற்று தனது ஃபேஸ்புக் பதி­வில் குறிப்­பிட்­டது.

துருக்­கி­யின் தென்­கி­ழக்குப் பகு­தி­யை­யும் அண்டை சிரியா நாட்­டின் வட­மேற்­குப் பகு­தி­யை­யும் கடந்த பிப்­ர­வரி 6ஆம் தேதி நிலநடுக்கம் உலுக்­கி­யது. இதை­ய­டுத்து, குடி­மைத் தற்­காப்­புப் படை 68 பேர் அடங்­கிய குழுவை மீட்­புப் பணி­களில் உதவ துருக்­கிக்கு அனுப்­பி­யது.

'ஆப­ரே­ஷன் லயன்­ஹார்ட்' எனப் பெய­ரி­டப்­பட்ட இந்த நட­

வ­டிக்­கை­யில், 'டார்ட்' எனப் பெயர் கொண்ட பேரி­டர் உதவி, மீட்­புக் குழு­வில் மருத்­துவ நிபு­ணர்­கள், துணை மருத்­துவ ஊழி­யர்­கள், தேடு­தல் நிபு­ணர்­கள், இந்த நட­வ­டிக்­கைக்கு தேவை­யான மற்ற ஊழி­யர்­கள் யாவ­ரும் இரண்டு பிரி­வு­க­ளாக அனுப்­பப்­பட்­ட­னர். பத்து நாள்­கள் நீடித்த இந்த நட­வ­டிக்­கை­யில், முன்­னோ­டிப் பிரி­வாக நகர்ப்­புற சூழ­லில் தேடு­தல், மீட்­புப் பணிக்கு தேவை­யான கரு­வி­கள், உயிர் சோத­னைக் கரு­வி­கள், கண்­ணாடி இழை உருப்பெருக்கிகள் ஆகி­யற்­று­டன் 20 பேர் துருக்­கி­யின் தென் பகுதி நக­ரான கார­மன்­ம­ரா­சுக்கு பிப்­ர­வரி 8ஆம் தேதி சென்­ற­னர்.

பின்­னர் இரண்­டா­வது குழு­வாக 48 அதி­கா­ரி­கள், படை­யின் கே-9 பிரி­வைச் சேர்ந்த நான்கு தேடு­தல் நாய்­கள், தேடு­தல், மீட்­புப் பணிக்கு தேவை­யான கூடு­தல் கரு­வி­கள், மருந்­துப் பொருள்கள், தொலைத் தொடர்பு உதவி சாத­னங்­கள் ஆகி­ய­வற்­று­டன் பிப்­ர­வரி 10ஆம் தேதி துருக்கி சென்­ற­னர்.

துருக்கி நில­ந­டுக்­கத்­தில் 100,000 கட்­ட­டங்­கள் இடிந்து விழுந்­தன; 50,000க்கும் மேலான உயி­ரி­ழப்பு ஏற்­பட்­டது. செவ்­வாய்க்­கி­ழமை வழங்­கப்­பட்ட விருதை சிங்கப்பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை சார்­பாக டார்ட் பிரி­வின் தள­பதி லெஃப்டி­னண்ட் கர்­னல் லோக் வீ கியோங் துருக்கி தலை­ந­கர் அங்­கா­ரா­வில் உள்ள அதி­பர் மாளி­கை­யில் பெற்­றுக்­கொண்­டார்.