போதைப் பொருள் கடத்தல்காரரின் இறுதிக்கட்ட சீராய்வு மனு நிராகரிப்பு

1 mins read
85ef60b8-4643-4e31-aba5-66d1fe33d604
-

போதைப் பொருள் கடத்­தல்­கா­ர­ரின் சீராய்வு மனு செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்­தால் நிரா­க­ரிக்­கப்பட்­டது. மரண தண்­ட­னையை நேற்று எதிர்­நோக்­கிக் காத்­தி­ருந்த அவ­ரு­டைய இறு­திக்­கட்ட முயற்­சி­யாக இந்த சீராய்வு மனு தாக்­கல் செய்­யப்­பட்­டது.

தங்­க­ராஜு சுப்­பையா தனக்கு விதிக்­கப்பட்ட மரண தண்­ட­னையை நிறுத்­தி­வைக்­கும்­ப­டி­யும் தமது வழக்கை மறு­ஆய்வு செய்­யும்­ப­டி­யும் தாக்­கல் செய்த அந்த மனுவை மேல்­மு­றை­யீட்டு நீதி­பதி ஸ்டீ­வன் சோங் நிரா­க­ரித்­தார்.

தங்­க­ராஜு சுப்­பையா தமது வழக்கை மறு­ஆய்வு செய்ய நியா­ய­மான கார­ணம் எதை­யும் தமது வாதத்­தில் முன்­வைக்­க­வில்லை என்று நீதி­பதி ஸ்டீ­வன் சோங் 15 பக்க எழுத்­து­பூர்­வ­மான தீர்ப்­பில் குறிப்­பிட்­டார்.

போதைப் பொருள் கடத்­த­லில் மற்­றொ­ரு­வ­ரு­டன் கூட்­டுச் சதி­யில் ஈடு­பட்டு 1 கிலோ­கி­ராம் கஞ்­சாவை பெற்­றுக்­கொள்­ளும் செய­லில் தங்­க­ராஜு ஈடு­பட்­ட­தற்­காக கடந்த 2018ஆம் ஆண்டு அவ­ருக்கு மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

பின்­னர், தீர்ப்பு, தண்­டனை இரண்­டுக்­கும் எதி­ரான அவ­ரது மேல்­மு­றை­யீ­டும் 2019ஆம் ஆண்டு நிரா­க­ரிக்­கப்ட்­டது.

அந்த மேல்­மு­றை­யீட்டு வழக்­கின் தீர்ப்­பில் தங்­க­ராஜு தமது கூட்­டா­ளி­யான மோகன் வேலுவை தொலை­பே­சி­யில் தொடர்புகொண்டு கஞ்சா கடத்­த­லில் ஈடு­பட்­ட­தாக மேல்

முறை­யீட்டு நீதி­பதி விளக்­கி­னார்.

இதற்கு முன்­ன­தாக, கடந்த 2022ஆம் ஆண்டு தங்­க­ராஜு தாக்­கல் செய்த மற்­றொரு சீராய்வு மனு­வும் நிரா­க­ரிக்­கப்

பட்­டது.