பல அடுக்கு காய்கறித் தோட்டம்; 500 டன் அளவுக்கு விளைச்சல்

பல அடுக்கு காய்கறித் தோட்டம்; 500 டன் அளவுக்கு விளைச்சல்

2 mins read
a322f923-5889-470d-97f1-0908822dec86
-

சிங்­கப்­பூ­ரில் பல அடுக்கு கொண்ட விவ­சா­யத்­தில் பல உள்­ளூர், வெளி­நாட்டு நிறு­வ­னங்­கள் ஈடு­பட்­டு­வ­ரும் நிலை­யில், தற்­பொ­ழுது ஹாலந்து நாட்­டின், வேளாண் தொழில்­நுட்­பத்­தில் சிறந்து விளங்­கும், குரோவி என்ற நிறு­வ­ன­மும் இதில் ஈடு­பட்­டுள்­ளது.

'சாங்கி லாஜிஸ்­டிக்ஸ் சென்­டர்' என்ற தள­வாட மையத்­தில் இருக்­கும் அந்த நிறு­வ­னத்­தின் பல அடுக்குக் தோட்­டம் ஆண்­டின் இரண்­டாம் காலாண்­டில் காய்­க­றி­களை உற்­பத்தி செய்­யும்­போது, அது ஆண்­டொன்­றுக்கு 500 டன் அள­வி­லான காய்­க­றி­களை உற்­பத்தி செய்­யும் வல்­லமை கொண்­டது என்று கூறப்­ப­டு­கிறது. இது 2030ஆம் ஆண்­டுக்­குள் சிங்­கப்­பூ­ருக்­கான உண­வுத் தேவை­யில் 30 விழுக்­காட்டை பூர்த்தி செய்­யும் இலக்­குக்கு ஆத­ரவு அளிக்­கும் என்று நம்­பப்­ப­டு­கிறது.

குரோவி நிறு­வ­னம் தனது 8,000 சதுர மீட்­டர் பரப்­ப­ளவு கொண்ட தோட்­டத்­தில் சாலட் உணவு வகை­களில் பயன்­ப­டுத்­தப்­படும் இலைக் காய்­க­றி­கள், மூலி­கை­கள் உட்­பட அனைத்­து­வி­த­மான காய்­க­றி­க­ளை­யும் விளைவிக்க எண்­ணம் கொண்­டுள்­ளது.

இதன் தொடர்­பில் பல அடுக்கு காய்­க­றித் தோட்­டக்

­க­லை­யில் குரோவி நிறு­வ­னம் ஆராய்ச்சி, மேம்­பாட்­டைக் குறி­வைத்து ஹாலந்து, சிங்­கப்­பூ­ரி­லுள்ள பல முன்­னணி அமைப்பு

­க­ளு­டன் ஏப்­ரல் 10ஆம் தேதி புரிந்­து­ணர்­வுக் குறிப்­பில் கையெ­ழுத்­திட்­டது.

"இந்­தப் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தம் ஹாலந்து நாட்­டின் தோட்­டக்­கலை நிபு­ணத்­து­வத்­துக்­கும் சிங்­கப்­பூ­ரில் தழைத்­தோங்­கி­

வ­ரும் உண­வுப் பாது­காப்­பில் ஆராய்ச்சி, மேம்­பாட்டு முறை­யை­யும் இணைக்­கும் பால­மாக விளங்­­கும்.

"இந்த இரண்டு அறி­வி­யல் நிலை­யங்­க­ளை­யும் ஒன்­றி­ணைப்­பது சிங்­கப்­பூ­ரி­லும் அதற்கு அப்­பா­லும் பல அடுக்கு விவ­சா­யத்தை விரி­வு­ப­டுத்த உத­வும்," என்று குரோவி நிறு­வ­ன­ரும் அதன் தலைமை நிர்­வாக அதி­கா­ரி­களில் ஒரு­வ­ரு­மான திரு ஆர்ட் வான் டி கிரீக் விளக்­கம்­அளித்­தார்.

சிங்­கப்­பூர் கடந்த 2019ஆம் ஆண்டு, 2030ஆம் ஆண்­டுக்­குள் நாட்­டின் உண­வுத் தேவை­யில் 30 விழுக்­காட்டை உள்­ளூர் வேளாண் துறை மூலம் உற்­பத்தி செய்­யும் திட்­டத்தை தொடங்கி வைத்­தது.

இந்த இலக்கை எட்ட பல அடுக்­கு­கள் கொண்ட விவ­சா­யத் தோட்­டம் இன்­றி­ய­மை­யா­தது.

நிலப்­ப­ரப்­பில் விவ­சா­யத்­திற்­கென 1 விழுக்­காட்­டுக்­கும் குறை­வான நிலப்­ப­ரப்பே உள்ள நிலை­யில், சிங்­கப்­பூர் உணவு உற்­பத்­தி­யில் தொழில்­நுட்­பத்தை நாடி­யுள்­ளது.