தொடர்ந்து 6வது மாதமாக சரிவுகண்ட உற்பத்தித் துறை

தொடர்ந்து 6வது மாதமாக சரிவுகண்ட உற்பத்தித் துறை

2 mins read
b4ce690b-0e8a-4df6-a1dc-291eb8e7855a
-

சிங்­கப்­பூ­ரின் உற்­பத்­தித் துறை, தொடர்ந்து 6வது மாத­மாக மார்ச் மாதத்­தி­லும் சரி­வைச் சந்­தித்து மோச­மான நிலையை அடைந்­து உள்­ளது.

பொரு­ளி­யல் மேம்­பாட்­டுக் கழ­கம் நேற்று வெளி­யிட்ட தர­வு­கள் இதனைக் காட்­டு­கின்­றன.

ஆண்டு அடிப்­ப­டை­யில் மார்ச் மாதத்­தில் தொழிற்­சாலை உற்­பத்தி 4.2 விழுக்­காடு வீழ்ச்­சி அ­டைந்­தது. பிப்­ர­வ­ரி­யில் இந்த வீழ்ச்சி 8.9 விழுக்­கா­டாக இருந்­தது. உயிர்­ம­ருத்­துவ துறையை தவிர்த்­துப் பார்த்­தால் மற்ற உற்­பத்தி ஆறு விழுக்­காடு குறைந்தது.

மூன்று மாத சரா­ச­ரியை அடிப்­ப­டை­யா­கக் கொண்­டால் கடந்த ஆண்­டை­விட மார்ச் மாதத்­தில் உற்­பத்தி 5.6 விழுக்­காடு சரிந்­தது.

ஆண்டு அடிப்­ப­டை­யில் மார்ச்­மாதத்தில் போக்­கு­வ­ரத்து பொறி­யி­யல் துறை­யின் உற்­பத்தி மட்டும் ஆகப்­பெ­ரிய அள­வில் 23.5 விழுக்­காடு கூடியது.

கடல் மற்­றும் கடல்­சார்ந்த பொறி­யி­யல் பிரிவு 48.4 விழுக்­காடு கூடி­யுள்­ளது.

கப்­பல்­து­றை­யின் நட­வ­டிக்­கை­கள் அதி­க­ரித்­ததே இதற்கு கார­ணம். எண்­ணெய், எரி­வாயு சாத­னங்­க­ளின் உற்­பத்தி கூடியதும் மற்­றொரு கார­ண­மா­கும்.

இதற்கு அடுத்­த­தாக உயிர் ­ம­ருத்­துவ துறை­யின் உற்­பத்தி ஆண்டு அடிப்­ப­டை­யில் ஏழு விழுக்­காடு வளர்ச்சி கண்­டது.

மருத்­துவ சாத­னங்­க­ளுக்­கான ஏற்­று­மதி தேவை அதி­க­ரித்­த­தால் மருத்­துவ தொழில்­நுட்ப உற்­பத்தி 18 விழுக்­காடு கூடி­யது. மாறாக, மருந்­துத் துறை ஒரு விழுக்­காடு குறைந்­தது.

ரசா­ய­னத் துறை மட்­டும் ஆக அதிக சரி­வைச் சந்­தித்­தது. ஆண்டு அடிப்­ப­டை­யில் அத்­துறை மார்ச் மாதத்­தில் 11.8 விழுக்­காடு வீழ்ச்­சி­ய­டைந்­தது.

விமா­னப் ­போக்­கு­வ­ரத்து தொடர்ந்து கூடியதால் விமானங்­ க­ளுக்­கான எரி­பொ­ருள் தேவையும் அதிகரித்து பெட்­ரோ­லி­யத் துறை 12.5 விழுக்­காடு வளர்ச்சி அடைந்­தது.