99க்கு ஒரு விழுக்காடு மூலம் வரி ஏய்ப்பு; தகவல் அளித்தால் $100,000 வெகுமதி

99க்கு ஒரு விழுக்காடு மூலம் வரி ஏய்ப்பு; தகவல் அளித்தால் $100,000 வெகுமதி

2 mins read
35c61dd6-7c12-4ab4-8bfa-9b79744f8941
-

கூடு­தல் முத்­திரை வரி­யைத் தவிர்ப்­ப­தற்­காக '99-to-1' என்ற முறையை அல்­லது அது­போன்ற ஏற்­பா­டு­களை பயன்­ப­டுத்­தும் தனி­யார் சொத்து வாங்­கு­ப­வர்­கள் குறித்து தக­வல் அளித்­தால் 100,000 வெள்ளி வரை வெகு­மதி அளிக்­கப்­படும் என்று சிங்­கப்­பூர் உள்­நாட்டு வரு­வாய் ஆணை­யம் அறி­வித்­துள்­ளது.

ஒவ்­வொரு சம்­ப­வத்­தி­லும் மீட்­கப்­பட்ட தொகை­யில் 15 விழுக்­காடு வெகு­மதி அளிக்­கப்­படும். இது, அதி­க­பட்­ச­மாக 100,000 வெள்ளி வரை இருக்­கும். வரியை மீட்­ப­தற்­கான தக­வல் அல்­லது ஆவ­ணங்­களை அளித்­தால் இந்த வெகு­மதி வழங்­கப்­படும் என்று வரி வசூல் செய்­யும் அமைப்பு குறிப்­பிட்­டது.

வரி ஏய்ப்பு குறித்த தக­வல் களுக்கு ஆணை­யம் வெகு­மதி வழங்­கு­வது இது முதல் முறை­அல்ல.

2018க்கும் 2021க்கும் இடையே '99-to-1' என்ற முறை அல்­லது அது­போன்ற ஏற்­பா­டு­கள் மூலம் 0.5 விழுக்­காடு தனி­யார் சொத்து பரி­வர்த்­த­னை­கள் நடந்­துள்­ளன.

இந்­தக் குறுக்கு வழி­யில் வீட்டை முழு­மை­யாக விற்­கா­மல் ஒரு விழுக்­காடு வீட்டை மட்­டும் குறு­கிய காலத்துக்கு வாங்­கு­ப­வர் களுக்கு விற்­கப்­ப­டு­கிறது.

இத­னால் வீட்டை விற்­ப­வ­ரும் வாங்­கு­ப­வ­ரும் இணை உரி­மை­யா­ளர்­க­ளா­க­வும் சொத்தை வாங்­கு­வ­தற்­கான வங்­கிக் கட­னுக்கு இணை விண்­ணப்­ப­தா­ரர் களா­க­வும் உள்­ள­னர்.

இதன் மூலம் ஏற்­கெ­னவே தனி­யார் சொத்து வைத்­தி­ருப்­ப­வர்­கள் கூடு­தல் முத்­திரை வரி செலுத்­து­வ­தைத் தவிர்க்க வழி ஏற்­ப­டு­கிறது. கடந்த வெள்­ளிக்­கி­ழமை இது போன்ற ஏற்­பா­டு­கள் குறித்து சில நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் சில கேள்­விகள் எ­ழுப்­பி­ய­போது நிதி மற்­றும் போக்­கு­ வ­ரத்து மூத்த துணை அமைச்­சர் சீ ஹொங் டாட் பதி­ல­ளித்­தி­ருந்­தார்.

இது குறித்து நாடா­ளு­மன்­றத்­தில் பேசிய அமைச்­சர் சீ ஹொங் டாட், இத்­த­கைய ஏற்­பா­டு­கள் சிறிய எண்­ணிக்­கை­யில் நடந்­துள்­ளன என்­றார்.

ஆனால் அண்­மைய ஆண்­டு­களில் ஒட்­டு­மொத்த குடி­யி­ருப்பு பரி­வர்த்­த­னை­களில் இதன் விகி­தம் அதி­க­ரித்து வந்­துள்­ளதை அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

சொத்தை வாங்க முடிவு செய்த குறு­கிய காலத்­தில் ஏன் ஒரு விழுக்­காடு வீட்டை மட்­டும் வாங்­கி­யுள்­ளீர்­கள் என்­பதை விளக்க வேண்­டும் என்று கூறி முதல் முறை­யாக சொத்து வாங்­கிய சில­ருக்கு ஆணை­யம் ஏப்­ரல் முற்­ப­கு­தி­யில் கடி­தம் அனுப்பி யிருந்­த­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தக­வல் வெளி­யிட்­டி­ருந்­தது.

தற்­போது தணிக்கை நடந்து வரு­வ­தால் இதுபோன்ற பரி­வர்த்­த­னை­க­ளின் தக­வல்­களை வெளி­யிட இய­லாது என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்­ட­தற்கு ஆணை­யம் கூறி­யது.

2018-2021 கால­கட்­டத்­தில் எக்­சி­கி­யூட்­டிவ் கொண்­டோ­மி­னிய வீடு­கள் நீங்­க­லாக 95,755 தனி­யார் வீடு­க­ளுக்­கான பரி­வர்த் தனை­கள் நடை­பெற்­றன என்று 'ஆரஞ்ச் டீ அண்ட் டை' நிறு வனத்­தின் பகுப்­பாய்வு, ஆய்­வுப் பிரி­வின் மூத்த உதவி தலை­வர் கிறிஸ்­டின் சன் தெரி­வித்­தார்.

இதன்­படி பார்த்­தால் 99-to-1 என்ற முறை­யின்­கீழ் 0.5 விழுக்­காடு வீடு­கள், அதா­வது 479 தனி­யார் வீடு­கள் விற்­கப்­பட்­டி­ருக்­க­லாம் என்றார் அவர்.