சாலை விபத்தில் 58 வயது ஓட்டுநர் மரணம்

சாலை விபத்தில் 58 வயது ஓட்டுநர் மரணம்

1 mins read
f3013dc8-857c-44c9-9dbd-e12e76c073d9
-

சாலை விபத்­தில் 58 வயது கார் ஓட்­டு­நர் உயி­ரி­ழந்­தார்.

புதன்­கி­ழமை காலை 6.50 மணி­ய­ள­வில் பாலஸ்டி­யர் சாலைக்கு வெளி­யே­றும் பாதைக்கு முன்பு ஆயர் ராஜா விரை­வுச் சாலையை நோக்­கிச் செல்­லும் மத்­திய விரைச் சாலை­யில் கட்­டுப்­பாட்டை இழந்த கார், காரு­ட­னும் பேருந்­து­ட­னும் மோதி­யது.

விபத்­தில் சிக்­கிய பேருந்து ஹுய் லியோங் என்ற நிறு­வ­னத்­துக்­குச் சொந்­த­மா­னது. நியூட்­ட­னில் உள்ள கட்­டு­மா­னத் தளத்­துக்கு 45 வெளி­நாட்டு ஊழி­யர்­களை ஏற்­றிக் கொண்டு பேருந்து சென்­ற­தாக அந்­நி­று­ வ­னத்­தின் இயக்­கு­ந­ரான டேரி லிம் சொன்­னார். சாம்­பல் நிற கார் பின்­பக்­கம் மோதி­யா­க­வும் பேருந்­தில் இருந்த யாருக்­கும் காயம் ஏற்­ப­ட­வில்லை என்­றும் அவர் கூறி­னார்.

"சாம்­பல் நிற கார் முத­லில் வெள்­ளை­நிற காரு­டன் மோதி நிற்­கா­மல் சென்­றது. சிறிது தூரம் ஓடிய பிறகு பேருந்து மீது மோதி நின்­றது," என்று பேருந்தை ஓட்­டிய வாங் வெய்யை மேற்­கோள் காட்டி திரு லிம் சொன்­னார்.

பேருந்­தில் இருந்து இறங்கி காரில் இருந்த ஓட்­டு­நரை வாங் பார்த்­த­போது அவர் மயங்­கிக் கிடந்­த­தா­க­வும் ஓட்­டு­ந­ரின் தலை கார் ஓட்­டும் கைப்­பிடி மீது சாய்ந்து கிடந்­த­தா­க­வும் திரு லிம் தெரி­வித்­தார்.

அங்கு வந்த குடி­மைத் தற்­காப்­புப் படை­யி­னர் கார் ஓட்­டு ­ந­ரின் இத­யத் துடிப்பை மீட்­கும் முயற்­சி­யில் ஈடு­பட்­ட­னர்.

டான் டோக் செங் மருத்­துவ மனைக்கு கார் ஓட்­டு­நர் மயங்­கிய நிலை­யில் கொண்டு செல்­லப்­பட்­டார். அங்கு அவர் மாண்­டார்.