நாணய மாற்றுக்காரரை தந்திரமாக ஏமாற்றிய விவகாரம்; சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்ட சந்தேக நபர்கள்

நாணய மாற்றுக்காரரை தந்திரமாக ஏமாற்றிய விவகாரம்; சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்ட சந்தேக நபர்கள்

1 mins read
18a410be-122b-4fd3-a739-5f9f4eff9fca
-

நாணய மாற்­றுக்­கா­ரரை தந்­திர மாக ஏமாற்­றிய விவ­கா­ரத்­தில் சம்­பவ இடத்­துக்கு இரு சந்­தேக நபர்­க­ளை­யும் அழைத்து வந்து நேற்று காவல்­துறை விசா­ரணை நடத்­தி­யது.

சென்ற வெள்­ளிக்­கி­ழமை கோல்­மேன் ஸ்தி­ரீட்­டில் உள்ள நாணய மாற்­றுக்­கா­ரர் பணம் திருட்டுப்போ­ன­தாக தெரிவித்­த­தைத் தொடர்ந்து காவல்துறை­ யி­னர் துரி­த­க­தி­யில் விசா­ர­ணை­யில் இறங்­கி­னர்.

முன்­ன­தாக 45, 54 மதிக்­கத்­தக்க இரு­வர், நாணய மாற்­றுக்­கா­ர­ரைத் தொடர்புகொண்டு சிங்­கப்­பூர் வெள்­ளியை மாற்­று­வ­தற்­கான ரொக்­கத்­தைத் தயாராக வைத்­தி­ருக்­கும்­படி கூறியுள்­ள­னர்.

மாலை 4.30 மணிக்கு அங்கு வந்த இரு­வ­ரும் நாணய மாற்­றுக்­கா­ர­ரி­டம் பண­முள்ள பையை சரி­பார்க்க ஒப்­ப­டைக்­கும்­படி தெரி­வித்­த­னர்.

பின்­னர் பணத்தை திரும்ப தரு­வ­து­போல ஒரு பையை கொடுத்­து­விட்டு, சிங்­கப்­பூர் வெள்ளி மற்­றும் கட­வுச்­சீட்டு களு­டன் பின்­னர் வந்து பணத்தை மாற்­றிக்­கொள்­வ­தா­கச் சொல்லி அவர்­கள் சென்­ற­னர்.

ஒரு மணி நேர­மா­கி­யும் திரும்­பா­த­தால் சந்­தே­க­ம­டைந்த நாணய மாற்­றுக்­கா­ரர் அவர்­கள் விட்­டுச் சென்ற பையைத் திறந்­து­பார்த்­தார்.

அதில் ஒரு யுஎஸ் டாலர், 100 யுஎஸ் டாலர் சில கட்­டு­களும் போலி யூரோ நோட்­டு­களும் இருந்­தன. அப்­போ­து­தான் தான் கொடுத்த பணத்தை இரு­வ­ரும் எடுத்­துச் சென்­று­விட்­ட­னர் என்­பதை நாணய மாற்­றுக்­கா­ரர் உணர்ந்­தார். இதை­ய­டுத்து சிங்­கப்­பூர் சாங்கி விமான நிலை­யத்­தி­லி­ருந்து ஜெர்­ம­னிக்­குப் புறப்­ப­ட­தயாரான விமா­னத்­தில் இருந்த இரு சந்­தேக நபர்­களை காவல்­து­றை­யி­னர் கைது செய்­த­னர்.

அவர்­க­ளி­ட­மி­ருந்து 74,600 யுஎஸ் டாலர், மின்­னி­லக்­கச் சாத­னங்­கள், குற்­றச்­செ­யல் புரிந்­த­போது அணிந்­தி­ருந்த ஆடை­கள் ஆகி­ய­வற்றை காவல்­து­றை­யி­னர் பறி­மு­தல் செய்­துள்­ள­னர். விசா­ரணை தொடர்­கிறது.