கழிவறையில் 52 வயதுப் பெண்ணை சுவரிலும், கைகழுவும் தொட்டியிலும் மோதி பின்னர் கட்டாய வன்புணர்வில் ஈடு பட்ட நபருக்கு நேற்று 12 ஆண்டு சிறைத் தண்டனையும் 16 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
சிவ் கீ ஹோக்குக்கு அப்போது வயது 28; தற்போது வயது 30.
தோ பாயோவில் உள்ள சுகாதாரப் பராமரிப்பு நிறுவனத்தில் அவர் பணியாற்றிவந்தார்.
2021 ஆகஸ்ட் 19ஆம் தேதி இரவு அலுவலகக் கட்டடத்தில் உள்ள கழிவறையில் மாது குளித்துக் கொண்டிருந்தபோது வலுக்கட்டாயமாக அவரை சிவ் பாலியல் வன்புணர்வு செய்தார்.

