பூமலையில் பெண்ணின் பாதத்தைப் படம் பிடித்தவரிடம் காவல்துறை விசாரணை

2 mins read
ba3b0dcc-ba79-49cc-8f15-90a4031059a2
-

சிங்­கப்­பூர் பூம­லை­யில் நடந்த ஒரு விநோ­த­மான சம்­ப­வம் குறித்து காவல்­துறை விசா­ரித்து வரு­கிறது.

தன்னை மக்­கள் கழ­கத்­தைச் சேர்ந்­த­வர் என்று அறி­மு­கப்­ப­டுத்­திக் கொண்ட ஓர் ஆட­வர், ஒரு பெண்­ணின் பாதத்­தைத் தொட்டு படம் பிடித்­துள்­ளார்.

பாதத்­தில் ஊக்­க­மூட்­டும் வார்த்­தை­களை எழு­தி­னால் அதைப் படம் பிடித்து வரு­கிற சிங்­கப்­பூர் இளை­யர் படை நிகழ்ச்சியில் பயன்­ப­டுத்­தப் போவ­தாக அவர் தெரி­வித்­துள்­ளார்.

சிங்­கப்­பூர் இளை­யர் படை, தேசிய இளை­யர் மன்­றத்த்­தின் தொண்­டூ­ழிய அமைப்­பா­கும்.

அந்த நிகழ்ச்­சி­யில் படத்தை பதா­கை­யாக வைக்­கப்­போ­வ­தா­க­வும் அந்த நபர் தெரி­வித்­துள்­ளார். அதனை தயக்கத்துடன் நம்பிய பெண், தனது பாதத்­தில் வார்த்தைகளை எழுதிக் காட்டினார்.

அப்­போது புகைப்படும் எடுப் பதற்காக பெண்­ணின் பாதத்­தைத் தொட்டு அந்த நபர் சரி செய்­துள்­ளார். இது, பெண்­ணுக்கு அசௌ­க­ரி­யத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

புகைப்­ப­டம் எடுப்­ப­தா­கக் கூறிய நபர் காணொளி எடுப்­ப­து­ போல தெரிந்­த­தால் பெண்­ணுக்கு சந்­தே­கம் வலுத்­தது. தன்னை நண்­ப­ராக ஏற்­றுக் கொள்­ளும்­ப­டி­யும் அவர் பெண்­ணி­டம் கேட்­டுள்­ளார்.

சந்­தேக நபர் சென்­ற­வு­டன் காவல்­து­றைக்கு பெண் தக­வல் கொடுத்­துள்­ளார்.

இந்நிலையில் இதுபோன்ற சிங்­கப்­பூர் இளை­யர் படை­யின் நிகழ்ச்சி எது­வும் நடை­பெ­ற­வில்லை என்று மக்­கள் கழ­கம் விளக்­கம் அளித்­துள்­ளது.

இம்­மா­தம் 17ஆம் தேதி எண் 1. குளுனி சாலை­யில் உள்ள சிங்­கப்­பூர் பூம­லை­யில் நடந்த சம்­ப­வம் தொடர்பில் உதவி கேட்டு அழைப்பு வந்­த­தா­க­வும், இது தொடர்­பான விசா­ர­ணை­யில் 35 வயது நபர் ஒத்­து­ழைப்பு வழங்கி வரு­வ­தா­க­வும் காவல்­துறை தெரி­வித்­தது.

தனது பெயரை வெளி­யிட மறுத்த 24 வயது பெண், பூமலை போன்ற இடங்­க­ளுக்­குச் சென்று சஞ்­சி­கை­களை வாசிப்­பது தமது விருப்­ப­மான பொழு­து­போக்கு என்று கூறி­னார்.

அண்­மை­யில் பல்­க­லைக் கழக பட்­டம் பெற்ற அவர் வேலை தேடி வரு­கி­றார்.

தனது பாதத்தை ஓர் ஆட­வர் புகைப்­ப­டம் எடுக்க விரும்­பி­யது சங்­க­ட­மாக இருந்­தா­லும் விரை­வில் அதை முடித்­து­விட விரும்பி யதாக அவர் சொன்னர்.

இதையடுத்து எச்சரிக்கையாக இருக்கும்பட மக்கள் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

"மக்­கள் கழ­கத்­தின் ஊழி­யர்­கள் தங்­க­ளு­டைய பெயர், புகைப்­ப­டம் அடங்­கிய அடை­யா­ளத்தை வைத்­தி­ருப்­பார்­கள். பொது­மக்­க­ளுக்கு சந்­தே­க­மி­ருந்­தால் அந்த அடை­யா­ளத்தை காட்­டச் சொல்­ல­லாம்.

"அரு­கில் உள்ள சமூக மன்­றங்­க­ளி­லும் கேட்டு சந்­தே­கத்தை தெளிவு படுத்­திக் கொள்­ள­லாம்," என்று மக்­கள் கழக பேச்­சா­ளர் ஒரு­வர் நினைவூட்டினார்.