இளையர்களைக் குறிவைக்கும் காப்புறுதி நிறுவனங்கள்

இளையர்களைக் குறிவைக்கும் காப்புறுதி நிறுவனங்கள்

1 mins read
da2f3759-d5fc-407c-aced-4afdb4437d17
-

இன்ஸ்­ட­கி­ராம், லிங்க்­டின் போன்ற சமூக ஊட­கங்­கள் மிகப் பிர­ப­ல­மா­னவை. இதன் கார­ண­மாக காப்­பு­றுதி நிறு­வனங்­கள் இளை­யர்­களை நிதி ஆலோ­ச­கர்­க­ளாக நிய­மிக்க அதிக நாட்­டத்­து­டன் உள்ளன.

அத்­த­கைய இளை­ஞர்­கள் புதுப்­புது தொழில்­நுட்­பங்­களை உட­னுக்­கு­டன் கைக்­கொள்­கிறார்­கள். இளைய வாடிக்­கை­யா­ளர்­க­ளு­டன் அவர்­கள் ஒத்­து­போ­கி­றார்­கள்.

இத­னால் அவர்­களைச் சேர்த்­துக்கொள்­வ­தில் தாங்­கள் மிகுந்த நாட்­டம் கொண்டு உள்ளதாக காப்­பு­றுதி நிறு­வ­னங்­கள் கூறு­கின்­றன.

கிரேட் ஈஸ்டர்ன் நிறு­வ­னம் சென்ற ஆண்டு முடிவு வாக்­கில் கிட்­டத்­தட்ட 1,000 நிதி ஆலோ­ச­கர்­களை அமர்த்தி இருந்­தது. அவர்­க­ளுக்கு வயது 21 முதல் 25 வரை.

2014ஆம் ஆண்­டு­டன் ஒப்­பிடும்போது இந்த எண்­ணிக்கை 77% அதி­கம் என்­பது குறிப்­பிடத்­தக்­கது.