அமேசான் ஆட்குறைப்பு; சிங்கப்பூரிலும் பாதிப்பு

2 mins read
e0c65449-6217-4af9-935d-061aad8bda0c
-

அமே­சான் நிறு­வ­னம் தன்­தொ­லை­தூர இணை­யச் சேவைத் துறை­யில் ஊழி­யர்­க­ளைக் குறைக்­கத் தொடங்கி இருக்­கிறது. ஆட்­கு­றைப்பு நட­வ­டிக்­கை­யில் 9,000 ஊழி­யர்­கள் பாதிக்­கப்­ப­டு­வர் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூ­ரில் செயல்­படும் அமே­சான் நிறு­வன ஊழி­யர்­களும் ஆட்­கு­றைப்­புக்கு ஆளா­கக் கூடிய நிலை இருக்­கிறது.

ஊழி­யர்­க­ளைக் குறைப்பது பற்றி அமே­சான் நிறு­வ­னம் மார்ச் மாதம் அறி­வித்­தது. அந்த நிறு­வ­னம் சென்ற ஆண்டு நவம்­பர் மாதத்­திற்­கும் இந்த ஆண்டு ஜன­வரி மாதத்­திற்­கும் இடை­யில் 18,000 வேலை­க­ளைக் குறைத்து­விட்­டது. அதைத் தொடர்ந்து மார்ச் மாத ஆட்­குறைப்பு அறி­விப்பு இடம்­பெற்­றது.

இது பற்றி அந்த நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி என்டி ஜாசி, மார்ச் மாதம் 20ஆம் தேதி அறி­வித்­தார்.

புதிய சுற்று ஆட்­கு­றைப்பு அடுத்த சில வாரங்­களில் தொடங்­கும் என்­றும் பெரும்­பாலும் அமே­சான் வெப் சர்­வீ­சஸ் என்ற தொலை­தூரக் கணி­னித்­து­றை­யில் ஆட்­கு­றைப்பு அதி­க­மாக இருக்­கும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

மனி­த­வ­ளம், விளம்­ப­ரம், விளை­யாட்­டுப் பிரி­வு­க­ளி­லும் ஊழி­யர்­கள் குறைக்­கப்­ப­டு­வார்­கள் என்­றும் அவர் கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரில் அமே­சான் நிறு­வ­னத்­தில், 2021 அக்­டோ­பர் நில­வ­ரப்­படி, சுமார் 2,000 முழு­நேர, பகு­தி­நேர ஊழி­யர்­கள் வேலை பார்த்­தார்­கள். அவர்­களில் எத்­தனை பேர் இது­வ­ரை­யில் ஆட்­கு­றைப்­புக்கு ஆளாகி இருக்­கி­றார்­கள் என்­பது தெளி­வா­கத் தெரி­ய­வில்லை.

இத­னி­டையே, ஊழி­யர்­களுக்கு அனுப்­பப்­பட்ட தக­வல் அறிக்­கையை தான் பார்த்­த­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நேற்று கூறி­யது. அமே­சான் வெப் சர்­வீ­சஸ் பிரி­வில் ஆட்­கு­றைப்­புக்கு ஆளா­ன­வர்­க­ளுக்கு அது பற்­றிய கடி­தம் அனுப்­பும் நடை­முறை தொடங்கி இருப்­ப­தாக அந்­தப் பிரி­வின் தலைமை நிர்­வாகி ஆடம் செலிப்ஸ்கி கூறி­னார்.