சேவை ரத்து; பயணிகளுக்கு சங்கடம்: மன்னிப்பு கோரிய எஸ்ஐஏ

சேவை ரத்து; பயணிகளுக்கு சங்கடம்: மன்னிப்பு கோரிய எஸ்ஐஏ

1 mins read
ce9013c6-3d30-471c-94c6-d7bf1eddc822
-

கோலா­லம்­பூ­ரில் இருந்து புதன்­கிழமை இரவு புறப்­பட்டு சிங்­கப்­பூர் வர­வி­ருந்த பய­ணி­கள் கோலாலம்பூர் விமான நிலை­யத்­தி­லேயே பல மணி நேரம் தங்க வேண்­டிய சூழ்­நிலை ஏற்­பட்­டது.

அவர்­கள் பய­ணம் செய்­ய­விருந்த சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் (எஸ்­ஐஏ) எஸ்­கியூ125 விமா­னத்­தில் தொழில்­நுட்­பப் பிரச்­சினை ஏற்­பட்­டதே கார­ணம்.

அந்த விமானம், 159 பய­ணி­கள், 13 ஊழி­யர்­க­ளு­டன் கோலா­லம்­பூ­ரில் இருந்து இரவு 8.40 மணிக்­குப் புறப்­பட்டு சிங்­கப்­பூருக்கு இரவு 9.50 மணிக்கு வந்து தரை­யி­றங்க இருந்­தது.

விமா­னம் தரை­யில் இருந்­த­போதே அதில் தொழில்­நுட்­பக் கோளாறு ஏற்­பட்­டு­விட்­டது என்று எஸ்­ஐஏ பேச்­சா­ளர் கூறி­ய­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.

பிறகு விமா­னம் நிற்­கும் இடத்­திற்குத் திரும்பி அனைத்து பயணி­களும் சிப்­பந்­தி­களும் வழக்­க­மாக தரை­யி­றங்­கி­னர்.

விமா­னத்­தில் ஏற்­பட்ட பிரச்சினையைச் சரி­செய்ய அதிக நேரம் தேவைப்­பட்­ட­தால் பாதிக்­கப்­பட்ட பய­ணி­களை வேறு விமா­னத்­திற்கு அனுப்ப முடிவு எடுக்­கப்­பட்­டது.

ஆனா­லும் அந்த யோசனை பிறகு ஒழுங்­கு­முறை கார­ணங்­களுக்­காக கைவி­டப்­பட்­டது.

விமா­னச் சேவை ரத்­தா­ன­தால் ஏற்­பட்ட சங்­க­டங்­க­ளுக்­காக தான் மனப்­பூர்­வ­மாக மன்­னிப்பு கேட்­டுக்கொள்­வ­தாக எஸ்­ஐஏ தெரி­வித்­தது.

பய­ணி­கள் வியா­ழக்­கி­ழமை கோலா­லம்­பூ­ரில் இருந்து வேறு விமா­னங்­களில் சிங்­கப்­பூ­ருக்கு அனுப்­பப்­பட்­ட­னர்.