அரும்பொருளக கண்காட்சியில் விமான நிலைய அறிவிப்பு பலகை

அரும்பொருளக கண்காட்சியில் விமான நிலைய அறிவிப்பு பலகை

1 mins read
ce6f578b-bc9c-4496-b22c-49d57f061571
-

சிங்­கப்­பூர் தேசிய அரும்பொருளகத்­தில், மே மாதம் 27ஆம் தேதி முதல் நவம்­பர் மாதம் 19ஆம் தேதி வரை 'புதிய புறப்­பாடு: பய­ணம் வழி சிங்­கப்­பூர் அனு­ப­வம்' என்ற ஒரு கண்­காட்சி நடக்­கும்.

சிங்­கப்­பூ­ரின் கடந்த 200 ஆண்டுகால பய­ணி­க­ளின் வர­லாற்றை அந்தக் கண்­காட்சி சித்­தி­ரிக்­கும்.

சாங்கி விமான நிலை­யத்­தின் இரண்­டா­வது முனை­யத்­தில் முன்பு பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்த விமான தக­வல் அறி­விப்­புப் பலகை அந்­தக் கண்­காட்­சி­யில் ஓர் அங்கமாக இடம்பெறும். இந்த பலகை (படம்) நேற்று (ஏப்ரல் 27) அரும்பொருளக வாசலில் பொருத்தப்பட்டது.

அதைக் காண ஊட­கங்கள் அழைக்­கப்­பட்டிருந்­தன. கண்­காட்சி பற்­றிய மேல் விவ­ரங்­கள் பின்­னர் அறி­விக்­கப்­படும்.