இரண்டரை நாளில் பணம் திருப்பித்தரப்படும்: ஷாப்பீ

இரண்டரை நாளில் பணம் திருப்பித்தரப்படும்: ஷாப்பீ

1 mins read
89985d7d-d542-45ff-92ec-be6b97ca99e8
-

மின் வர்த்­த­கத்­தில் தவ­றான இடத்­தில் பொருள் விநி­யோ­கம், பழு­த­டைந்த பொருள்­கள் என புகார்­கள் அதி­க­ரித்து வரும் சூழ­லில் ஷாப்பீ என்ற மின்­வர்த்­தகத் தளம், இது­போன்ற சம்­ப­வங்­கள் நடக்­கா­மல் இருக்க தனது சேவை­யின் தரத்தை உயர்த்த உறுதி பூண்­டுள்­ளது.

இதற்­காக 'கேஸ்' என்று அழைக்­கப்­படும் சிங்­கப்­பூர் பயனீட்­டா­ளர் சங்­கத்­து­டன் சிங்­கப்­பூர் ஷாப்பீ ஒரு புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­திட்­டுள்­ளது.

இதன்படி வாடிக்­கை­யா­ளர் ­க­ளின் திருப்­தியை உறுதி செய்­யும் வகை­யில் சச்­ச­ர­வு­க­ளுக்­குத் தீர்வுகாண புதிய முறை கடைப் பிடிக்­கப்­படும்.

வாடிக்­கை­யா­ளர் கோரிக்கை விடுத்த இரண்டரை நாளில் தீவு முழு­வ­தும் உள்ள நிலை­யங்­கள் மற்­றும் இதர வழி­களில் பணத்தை திருப்பித்தர ஷாப்பீ கடப்­பாடு கொண்­டுள்­ளது.

இது, லசாடா பரிந்­து­ரைத்­துள்ள மூன்று வேலை நாள்­ களுக்கு இணை­யாக உள்­ளது. மேலும் 'கேஸ்' பரிந்­து­ரைத்த ஏழு வேலை நாள்­க­ளை­விட குறைவு. அது மட்டு­மல்­லா­மல் அமே­சான் தனது இணை­யத்­த­ளத்­தில் பரிந்­துரை செய்துள்ள 45 நாள்­க­ளை­விட இது குறைவு.

'ஷாப்­பீ­யு­டன் பாது­காப்­பாக பொருள்­களை வாங்­குங்­கள்' என்ற வாடிக்­கை­யா­ளர் பாது­காப்புத் திட்­டத்தை நேற்று தொடங்கி வைத்­த ஷாப்பீ, புதிய மாற்­றங்­களை அறி­வித்­தது.

விற்­ப­னை­யா­ளர் மீதான நம்­ப­கத்­தன்­மையை மேம்­ப­டுத்­து­வது மாற்­றங்­களில் ஒன்று.

'கேஸ்' தலை­வர் மெல்­வின் யோங், இணை­யம் வழி­யா­கப் பொருள்­களை வாங்­கு­வது நமது வாழ்க்­கை­யில் இன்­றி­மை­யாத அம்­ச­மாக மாறி­விட்­டது என்­றார்.

மின்வர்த்தகத்தில் 2021ல் 2,206ஆக இருந்த வாடிக்கையாளர் புகார்கள், 2022ல் 2,530க்கு அதிகரித்துள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.