முன்பின் அறிமுகமில்லாதவரை கும்பலாகத் தாக்கிய மூவர்

முன்பின் அறிமுகமில்லாதவரை கும்பலாகத் தாக்கிய மூவர்

2 mins read
b7fee89c-9af2-40a5-a2af-707b2fcfe411
-

சீர்­தி­ருத்­தப் பயிற்சி நிலை­யத்­தில் முதல் முறை­யாக சந்­தித்­துக் கொண்­ட மூவர், தற்போது சேர்ந்து சிறைத் தண்டனையை அனுபவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கிளார்க் ­கீ­யில் முன்­பின் அறி மு­கமில்­லா­த­வரை மூவ­ரும் கும்­ப­லா­கச் சேர்ந்து தாக்­கி­யுள்­ள­னர். மூவ­ரில் ஒரு­வ­ரான முஹ­மட் அமி­ருல் ஷஃபி அப்­துல்லா, 23, மற்­றொ­ரு­வரைத் தாக்­கிய குற்றத்தை நேற்று ஒப்­புக்­கொண்­டார்.

அவ­ருக்கு பத்து மாதச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. பாதிக்­கப்­பட்ட ஜஸ்­டின் சுவா யோங் ஜிக்கு $269,65 இழப்­பீ­டாக வழங்­க­வும் அவ­ருக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டது. ஆனால் அந்த தொகையை அவ­ரால் கொடுக்க முடி­யா­த­தால் கூடு­த­லாக மூன்று நாள் சிறை­த் தண்டனையை அமிருல் அனுபவிக்க வேண்டும்.

மார்ச் 20ஆம் தேதி­யன்று அமி­ருல், டைட்டஸ் வோங் வெய் ஷி, 21, டேனி சுலாஸ்­டிரி முஹ­மட் சலிம், 23, ஆகிய மூவ­ரும் இரவு ஏழு மணி­ய­ள­வில் போட் கீ அருகே சர்க்­கியுலர் சாலை­ மது­பா­னக் கூடத்­துக்­குச் சென்று பீர் அருந்­தி­னர்.

குடித்துக்­கொண்டே மூவ­ரும் கிளார்க் கீக்கு அருகே மெர்ச்­சண்ட் ரோட்­டில் உள்ள ரிவர்­சைட் பாய்ண்ட் கடைத்­தொ­கு­தி அருகே வந்­த­னர்.

அப்­போது முன்­பின் அறி­மு­க­மில்­லாத சுவாவை டைட்டஸும் அமி­ரு­லும் பின்­பக்­க­மா­கத் தாக்­கி­னர். சத்­தம் கேட்ட டேனி­யும் அவர்­களு­டன் சேர்ந்து அந்த நப­ரைத் தாக்­கி­னார்.

அந்த நபர் தன்னை முறைத்­த­தாக அமிருல் நம்பினார்.

திரு சுவாவை கத்­தி­யால் தாக்கி மூன்று முறை வெட்­டி­ய­தா­க­வும் அமி­ருல் தெரி­வித்­தி­ருந்­தார். இதன் பிறகு மூவ­ரும் ஓடி­விட்­ட­னர்.

சுவா­வுக்கு மண்­டை­யோட்­டில் காயம் ஏற்­பட்டு சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிற்பகுதியில் அமிருலும் வோங்கும் கைது செய்யப் பட்டனர். அடுத்த மாதமே டேனி­யும் பிடி­பட்­டார்.

அடிக்கடி போதைப் பொருள் புழங்கும் வோங்குக்கு இவ்வாண்டு பிப்ரவரியில் ஐந்து ஆண்டு, எட்டு மாதச் சிறைத் தண்டனையும் மூன்று பிரம்படி களும் விதிக்கப்பட்டன.

டேனிக்கு கடந்த ஜனவரி மாதம் எட்டு மாதம், மூன்று வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.