சட்டவிரோத சூதாட்டம்; 12 பேரிடம் காவல்துறை விசாரணை

சட்டவிரோத சூதாட்டம்; 12 பேரிடம் காவல்துறை விசாரணை

1 mins read
d32eee98-58d9-4f7c-9c83-17662f87a36e
-

சட்­ட­வி­ரோத சூதாட்­டம் தொடர்­பாக 76 வயது முதி­ய­வர் உட்­பட 12 பேரி­டம் விசா­ரணை நடத்­தப்­பட்டு வரு­கிறது.

சென்ற செவ்­வாய்க்கிழமை ஈசூன் ஸ்தி­ரீட் 61ல் உட்­லண்ட்ஸ் காவல் நிலை­யத்­தைச் சேர்ந்த அதி­கா­ரி­கள் திடீர் சோதனை மேற்­கொண்­ட­னர்.

அப்­போது சட்­ட­வி­ரோத சூதாட்­டங்­களை நடத்­தி­ய­தா­கக் கூறப்­படும் மூவரை காவல்துறை­யி­னர் கைது செய்­த­னர்.

மேலும் ஏழு ஆண்­களும் ஒரு பெண்­ணும் சட்­ட­வி­ரோத சூதாட்­டத்­தில் பங்­கேற்­ற­தற்­காக கைது செய்­யப்­பட்­ட­னர்.

கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளின் வயது 51க்கும் 64க்கும் இடைப் பட்­டது. இந்­தச் சம்­ப­வத்­தில் அனு­ம­தி­யில்­லாத சூதாட்­டக் கூடத்­தில் இக்குற்றச் செயலில் ஈடு­பட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­படும் 76 வயது முதி­ய­வர் விசா­ர­ணை­யில் உதவி வரு­கி­றார்.

இந்­தச் சோத­னை­யில் மூன்று கைப்­பே­சி­கள், $10,700 ரொக்­கம், சூதாட்­டத்­திற்­குப் பயன்­ப­டுத்­தப்­பட்ட பொருள்­களை காவல் துறை­யி­னர் கைப்­பற்­றி­யுள்­ள­னர்.

விசா­ரணை தொடர்ந்து நடை­பெற்று வரு­கிறது.