சுகாதாரப் பராமரிப்பு வேலைகளுக்கு நல்ல எதிர்காலம்

சுகாதாரப் பராமரிப்பு வேலைகளுக்கு நல்ல எதிர்காலம்

2 mins read
e806b9fd-7912-4acc-9801-a1b6cced0ad1
-

எதிர்­கா­லத்­தில் சுகா­தா­ரப் பரா மரிப்புத் துறை வேலை­க­ளுக்கு பாதிப்பு இருக்­காது என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

புளூம்­பெர்க்­கின் எம்­எல்­ஐவி பல்ஸ் நடத்­திய அண்­மைய ஆய்­வில் தங்­க­ளு­டைய பிள்­ளை­கள் எதிர்­கா­லத்­தில் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை­யில் கால் பதிப்­பது குறித்து பெற்றோர் சிந்­தித்­துப் பார்க்க வேண்­டும் என்று பலர் கூறி­யுள்­ள­னர்.

தற்­போது தொடக்­கப்­பள்­ளி­யில் படிக்­கும் மாண­வர்­கள், நவீன செயற்கை நுண்­ண­றிவு தொழில்­நுட்­பத்­தால் பாதிக்­கப்­ படா­மல் இருக்க வேண்­டு­மா­னால் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு வேலை களுக்­குச் செல்­வது நல்­லது என்­பது நாற்­பது விழுக்­காட்­டி­ன­ரின் கருத்­தா­கும்.

மருத்­துவத் துறை­யில் உள்ள பெரும்­பா­லான வேலை­கள் மனி­தர்­க­ளுக்கு இடை­யி­லா­னவை. அவற்றை 'சாட்­ஜி­பிடி' போன்ற செயற்கை நுண்­ண­றிவு தொழில்­நுட்­பங்­க­ளால் மாற்ற முடி­யாது. ஒரு மருத்­து­வ­ரா­கவோ அல்­லது தாதி­ய­ரா­கவோ வேலை செய்­வது இளைய தலை­மு­றை­யி­ன­ருக்கு ஒரு புத்­தி­சா­லித்­த­ன­மான தேர்­வாக இருக்­கும் என்று பலர் வலி­யு­றுத்­தி­யி­ருந்­த­னர்.

அமெ­ரிக்கா மற்­றும் உல­கம் முழு­வ­தும் மூப்­ப­டை­யும் மக்­கள் தொகை அதி­க­ரிப்­பதே இதற்கு கார­ணம்.

ஆனால் முத­லீட்­டா­ளர்­கள் மாறு­பட்ட யோச­னை­யைத் தெரி­வித்­துள்­ள­னர்.

பள்ளி மாண­வர்­கள் தொழில்­நுட்ப வேலை­களை தேர்ந்­தெ­டுப்­பது சிறந்­தது என்று அவர்­கள் கூறு­கின்­ற­னர்.

அண்­மை­யில் மெட்டா பிளாட்­ஃபார்ம்ஸ், அமே­சான், ஆல்­ஃப­பெட் போன்ற தொழில்­நுட்ப நிறு­வ­னங்­களில் பெரு­ம­ள­வில் ஊழி­யர்­கள் நீக்­கப்­பட்­டா­லும் தொழில்­நுட்­பத்­திற்­கான தேவை குறை­யாது. செயற்கை நுண்ணறிவு ஆபத்­தாக விளங்­கு­கிறது. அதே சம­யத்­தில் மின்­னி­லக்­கத் தளங்­கள் கூடி வரு­வ­தால் தொழில்­நுட்­பத்­தின் செல்­வாக்கு தொடர்ந்து அதி­க­ரிக்கும் என்று முத­லீட்­டா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.

அடுத்த இருபது அல்­லது முப்­பது ஆண்­டு­களில் அதி­க­ளவு சம்­ப­ளம் வழங்­கும் துறை­யாக நிதித் துறை இருக்­கும். இதற்கு அடுத்­த­தாக மிக நெருக்­க­மாக தொழில்­நுட்­பத் துறை உள்­ளது என்று சேலஞ்­சர் மனி­த­வள ஆலோ­சனை நிறு­வ­னத்­தின் உதவித் தலை­வர் கிரே அண்ட் கிறிஸ்மஸ் தெரி­வித்­தார்.

செயற்கை நுண்­ண­றிவு தலை தூக்­கி­னா­லும் தொழில்­நுட்­பம், நிதி ஆகிய இரண்டு துறை­க­ளி­லும் அடுத்த 20 அல்­லது முப்­பது ஆண்­டு­க­ளுக்கு பிர­கா­ச­மான வேலை வாய்ப்­பு­கள் இருக்­கும் என்­றும் அவர் கூறி­னார்.

ஏறக்­கு­றைய 556 முத­லீட்டு நிபு­ணர்­களில் 52 விழுக்­காட்­டி­னர் பள்ளி மாண­வர்­க­ளுக்கு தொழில்­நுட்­பமே சிறந்த எதிர்­கா­லத்தை வழங்­கும் என்று தெரி­வித்­துள்­ள­னர்.

மேலும் 122 சில்­லறை முத­லீட்­டா­ளர்­களில் 42 விழுக்­காட்­டி­னர் தொழில்­நுட்­பத்­திற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­துள்­ள­னர்.