2022ல் மோசடி சம்பவங்கள் 6 விழுக்காடு குறைந்தன

2022ல் மோசடி சம்பவங்கள் 6 விழுக்காடு குறைந்தன

3 mins read
0e1e0126-77b8-46b6-99d2-15a48306d689
-

லஞ்ச ஊழல் தொடர்­பான புகார்­கள் கடந்த ஆண்­டில் குறைந்­துள்­ளன என்று லஞ்ச ஊழல் புல­னாய்வு மன்­றம் நேற்று தெரி­வித்­தது. 2022ல் அது 234 லஞ்ச ஊழல் தொடர்­பான புகார்­களை விசா­ரித்­தது என்­றும் 2021ல் அந்த எண்­ணிக்கை 249 என்­றும் மன்­றம் தனது வரு­டாந்­திர அறிக்­கை­யில் கூறி­யது.

கடந்த ஆண்டு விசா­ரித்த 234 புகார்­களில் 83 புதி­யன என்­றும் 2021லும் அந்த எண்­ணிக்­கை­யிலான புகார்­க­ளைப் பெற்­ற­தா­க­வும் அது குறிப்­பிட்­டது. இது, விகி­தா­சா­ரத்­தில் 35%. அதற்கு முந்­திய நான்கு ஆண்­டு­க­ளின் புகார்­களைவிட சற்று அதி­கம்.

தனக்­குக் கிடைக்­கும் தக­வ­லின் உண்­மைத்­தன்மைக்கேற்ப ஒரு புகார் பதி­வு செய்யப்­ப­டு­கிறது என்று கூறிய மன்­றம் இது பெறப்­படும் தக­வ­லின் நம்­ப­கத்­தன்­மை­யைப் பொறுத்­தது என்­றது.

"சிங்­கப்­பூ­ரில் லஞ்ச ஊழல் நிலைமை முற்­றி­லும் கட்­டுக்­குள் உள்­ளது. நாங்­கள் சமூ­கத்­தில் எங்­கள் பங்­கா­ளி­க­ளின் முக்­கிய பங்­க­ளிப்­பு­களை ஆழ­மாக மதிக்­கி­றோம். அதைக் கொண்டு லஞ்ச ஊழலை எதிர்க்­கும் பொது­வான இலக்கை நோக்கி நடை­போ­டு­கி­றோம்.

"லஞ்ச ஊழ­லுக்கு எதி­ராக பொது­மக்­கள் விழிப்­பு­டன் இருப்­ப­தற்­கும் ஏதே­னும் தவறு நேர்ந்­தால் அது­பற்றி உட­ன­டி­யாக புகா­ர­ளிப்­ப­தற்­கும் நாங்­கள் நன்­றி­கூற கட­மைப்­பட்­டி­ருக்­கி­றோம். ஒன்­று­சேர்ந்து லஞ்ச ஊழ­லற்ற சிங்­கப்­பூரை உரு­வாக்­கும் முயற்­சி­யைத் தொடர்­வோம்," என்று மன்­றம் தனது அறிக்­கை­யில் விவ­ரித்­தது.

லஞ்ச ஊழல் தொடர்­பான தக­வல் உள்­ள­வர்­கள் எண் 2, லெங்­கோக் பாரு­வி­லுள்ள லஞ்ச ஊழல் புல­னாய்வு மன்­றத்­தின் தலை­மை­ய­கத்­திற்கு தக­வல் அளிப்­ப­வ­ரின் விவ­ரங்­க­ளைக் குறிப்­பி­டா­மல் கடி­தம் அனுப்­ப­லாம் அல்­லது 1800-376-0000 எண்ணை அழைக்­க­லாம் அல்­லது https://www.cpib.gov.sg/e-services/e-complaint-for-corrupt-conduct எனும் இணை­யப் பக்­கம் மூல­மாக மின்­னி­யல் புகார் அளிக்­க­லாம் அல்­லது report@cpib.gov.sg எனும் முக­வரி மூலம் மின்­னஞ்­சல் அனுப்­ப­லாம்.

பெயர் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தா­லும் இல்­லா­விட்­டா­லும் தனக்­குக் கிடைக்­கும் அனைத்­துப் புகார்­க­ளை­யும் தான் தீவி­ர­மாக பரிசீலிக்கும் என்­றும் மன்­றம் சொன்­னது.

கடந்த ஆண்டு கிடைக்­கப்­பெற்ற லஞ்ச ஊழல் தொடர்­பான 234 புகார்­களில் 100 அதா­வது 43% புகா­ர­ளிப்­ப­வ­ரின் விவ­ரங்­கள் இல்­லா­மல் வந்­தன. கடந்த ஆண்டு புல­னாய்­வுக்­காக எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட 83 சம்­ப­வங்­களில் 13 அதா­வது 16% பெயர் அளிக்க விரும்­பா­த­வர்­க­ளி­ட­ம் இருந்து வந்­தன.

லஞ்ச ஊழ­லுக்கு எதி­ரான தேசிய முயற்­சி­கள் கடந்த மூன்று ஆய்­வு­களில் முன்னேற்றம் கண்டுள்ளதாக, ஈராண்­டுக்கு ஒரு­முறை லஞ்ச ஊழல் புல­னாய்வு மன்­றத்­தால் நடத்­தப்­படும் பொதுக் கண்­ணோட்ட கருத்­தாய்­வில் தெரி­ய­வந்­தது.

ஈராண்­டுக்கு ஒரு­முறை லஞ்ச ஊழல் பற்­றி­யும் லஞ்ச ஊழல் புல­னாய்வு மன்­றம் பற்­றி­யும் கருத்­தாய்வு நடத்த, மன்­றம் ஒரு சுயேச்­சை­யான ஆய்வு நிறு­வ­னத்­தின் சேவையை நாடு­கிறது. அதன் தொடர்­பில் சிங்­கப்­பூ­ரின் மக்­கள்­தொ­கை­யைக் கருத்­தில் கொண்டு கிட்­டத்­தட்ட 1,000 பேரி­டம் கருத்­து­கள் சேக­ரிக்­கப்­பட்­டன.

கடந்த ஆண்டு நடத்­தப்­பட் ஆய்­வில் பங்­கேற்­ற­வர்­களில் 96 விழுக்­காட்­டி­னர் சிங்­கப்­பூ­ரில் லஞ்ச ஊழல் கட்­டுப்­பாட்டு முறை­கள் சிறப்­பாக, மிகச் சிறப்­பாக, அற்­பு­த­மாக உள்­ளது என்று கூறி­னர். இது 2020ல் 94 விழுக்­கா­டா­க­வும் 2018ல் 92 விழுக்­கா­டா­க­வும் 2016ல் 90 விழுக்­கா­டா­க­வும் இருந்­தது.

ஆய்­வில் பங்­கேற்­ற­வர்­களில் 89 விழுக்­காட்­டி­னர் லஞ்ச ஊழல் பற்றி புகா­ர­ளிக்க முன்­வ­ரும் மக்­க­ளின் பொறுப்­பு­ணர்ச்­சியே லஞ்ச ஊழ­லுக்கு எதி­ரான போராட்­டத்­துக்கு முக்­கி­யம் என்று கருத்­து­உரைத்­த­னர்.