செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
54d10a33-1ee5-428e-acc0-d5e24166e89b
-

காலாவதியான உரிமங்களுடன் செயல்பட்ட 19 உணவுக் கடைகள்

சிங்கப்பூர் உணவு அமைப்பு மேற்கொண்ட திடீர் சோதனையில் 19 உணவு விற்பனை நிலையங்கள் காலாவதியான உரிமங்களுடன் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று நேற்று தெரிவிக்கப் பட்டது. அவற்றில் 14 விற்பனை நிலையங்களின் உரிமை யாளர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்றும் எஞ்சியுள்ள விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் மீது இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறிய உணவு அமைப்பு, அவர்களுக்கு $20,000 வரையிலான அபராதம் அல்லது மூன்று மாதம் வரையிலான சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்றும் தெரிவித்தது.

அமைப்பின் தகவல் ஏட்டின்படி உரிமம் காலாவதியான 391 உணவு விற்பனை நிலையங்களை மையமாகக் கொண்டு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவற்றில் 19 நடத்துநர்கள் தங்கள் உரிமம் காலாவதி யானது தெரிந்தும் தொடர்ந்து உணவு விற்பனை நிலை யங்களை நடத்தி வந்தனர். சோதனைக்கு உட்படுத் தப்பட்ட 391 உணவு விற்பனை நிலையங்களில், உணவ கங்கள், உணவுத் தயாரிப்பு நிறுவனங்கள், உணவு நிலை யங்கள், காப்பிக் கடைகள், பேரங்காடிகள் ஆகியவற்றில் உள்ள உணவுச் சாவடிகள் முதலியவை அடங்கும்.

எல்லா உணவு விற்பனை நிலையங்களிலும் செயல் பாட்டு உரிமங்கள் இருக்க வேண்டும் என்றும் காலாவதி தேதிக்கு முன்னதாக அது புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் சிங்கப்பூர் உணவு அமைப்பு கேட்டுக்கொண்டது.

வாட்ஸ்அப் குறுஞ்செய்தி மோசடி பற்றி 'எஸ்ஜிஎச்' மருத்துவமனை எச்சரிக்கை

சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் (எஸ்ஜிஎச்) மூத்த நிர்வாக அதிகாரி என்று பொய் சொல்லி, சக ஊழியர் களுக்கு வாட்ஸ்அப் குறுஞ்செய்தி மூலம் தன் சார்பாக பரிசுப் பொருள்கள் வாங்கிக்கொடுக்கச் சொல்லும் புதிய மோசடி குறித்து அந்த மருத்துவமனை எச்சரித்துள்ளது.

வாட்ஸ்அப் குறுஞ்செய்தி மோசடி பற்றி கைப்பேசி திரையின் படத்தை எஸ்ஜிஎச் தனது ஃபேஸ்புக் பக்கத் தில் பதிவேற்றம் செய்திருந்தது. வாட்ஸ்அப் குறுஞ்செய்தி பெற்றவர் அந்த மருத்துவமனையின் ஊழியர் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.

"எஸ்ஜிஎச் மூத்த நிர்வாக அதிகாரி அனுப்புவதுபோல வாட்ஸ்அப் குறுஞ்செய்தி மூலம் தன் சார்பாக பரிசுப் பொருள்கள் வாங்கிக்கொடுக்கச் சொல்லும் புதிய மோசடி பற்றி எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் மூத்த நிர்வாக அதிகாரிகள் இதுபோன்ற காரியங்களில் ஈடுபட மாட்டார்கள் என்பதை வலியுறுத்த விரும்பு கிறோம்," என்று எஸ்ஜிஎச் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது. மோசடி குறுஞ்செய்தியைக் கண்டு பிடிக்கும் வழிகளும் ஃபேஸ்புக்கில் இடம்பெற்றிருந்தன.

"+" என்று எண்ணுக்கு முன் இருந்தால் அது வெளி நாட்டிலிருந்து அழைக்கப்படும் எண். உடனடியாக ஒன்றைச் செய்யத் தூண்டும் குறுஞ்செய்தியும் மோசடிக்கு ஓர் உதாரணம். மோசடிப் பேர்வழி எஸ்ஜிஎச் மூத்த நிர்வாக அதிகாரியின் புகைப்படத்தைப் பயன்படுத்துவார்.

இந்த மோசடி குறித்து காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த சிங்கப்பூர் பொது மருத்துவமனை, இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் விழிப்புடன் இருக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டது.