தமிழ்மொழி விழா இளையர்கள்

தமிழ்மொழி விழா இளையர்கள்

1 mins read
4d13a0ae-a797-4967-be8a-fec587517175
-

கடந்த நான்கு வாரங்­க­ளாக நம் சிங்­கை­யின் மூலை முடுக்­கெல்­லாம் தமிழ் தென்­றல் வீசி கொண்டு இருக்­கிறது. ஒவ்­வொரு நிகழ்­வி­லும் தமிழ் சிந்­த­னை­கள் இத­மான அரு­வி­யாய் கொட்டி கொண்டு இருக்­கிறது. ஒவ்­வொரு நிகழ்­வி­லும் நம் இளை­யர்­க­ளின் பங்கு மிகச் சிறப்பு. பங்குபெறும் மாண­வர்­கள், இளை­யர்­கள் ஒரு­வ­ருக்கு ஒரு­வர் போட்டிப் போட்டுக் கொண்டு, ஒரு­வ­ருக்கு ஒரு­வர் சளைத்­த­வர்­கள் அல்ல என்­பதை நிரூ­பித்து வருகிறார்கள். மிக­வும் மகிழ்ச்­சி­யாக இருக்­கிறது.

தமிழ் முர­சும் ஒவ்­வொரு நாளும் முதல் பக்­கத்­தில், சிங்கை தெருக்­க­ளின் பெயர்­க­ளை­யும், அதன் பழைய கம்­பம் பெய­ரை­யும் வெளி­யிட்டு வரு­கிறது. மிக­வும் பய­னுள்ள தக­வல். அதிலே கியூ­ஆர் குறியீடு வைத்து, அதில் அந்த கம்­பத்தைப் பற்­றிய சிறு குறிப்­பு­க­ளை­யும், பெயர் கார­ணத்­தை­யும் வைத்­தால் இன்­னும் சிறப்­பா­க­வும், பய­னுள்­ள­தா­க­வும் இருக்­கும்.

- ஜோதி மாணிக்கவாசகம்