தொழில்நுட்பத் தேர்ச்சிகள்: வேகமாக முன்னேற வேண்டும்

தொழில்நுட்பத் தேர்ச்சிகள்: வேகமாக முன்னேற வேண்டும்

2 mins read
9f717013-57b4-417b-8398-e11d3e0383c4
-

அதிபர்: தேர்ச்சி அடிப்படையிலான வேலைகள் பற்றி இன்னமும் பொருத்தமில்லாத கருத்து

சிங்­கப்­பூ­ரில் தொழில்­நுட்­பத் தேர்ச்­சி­க­ளு­டன்­கூ­டிய ஊழி­யர்­களை அங்­கீ­க­ரிக்க அதிக முயற்சி­கள் இடம்­பெறு­கின்­றன.

என்­றா­லும்­கூட இதைப் பொறுத்­த­வரை சிங்­கப்­பூர் வேக­மாக முன்­னேற வேண்­டிய தேவை இருக்­கிறது என்று அதிபர் ஹலிமா யாக்­கோப், தனது வரு­டாந்­திர மே தினச் செய்­தி­யில் வலி­யு­றுத்­திக் கூறி­னார்.

சுவிட்­சர்­லாந்து, ஜெர்­மனி நாடு­களில் படிக்­கும்­போதே மாண­வர்­க­ளுக்­குத் தொழில்துறை பயிற்­சி­களை நிறு­வ­னங்­கள் நேரடி­யா­கக் கொடுக்­கின்­றன.

ஆகை­யால், அந்த நாடு­களில் தேர்ச்­சி­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்ட நல்ல வேலை­கள் நடப்­பில் உள்ளதாக அதி­பர் கூறினார்.

"தொழில்­நுட்­பத் தேர்ச்­சி­களைக் கொண்ட வேலை­கள் முறை­யாக, உயர்­வாக மதிக்­கப்­பட வேண்­டும். பொருத்­த­மான வெகு­மதி அளிக்­கப்­பட வேண்­டும்.

"நல்ல ஊதி­யம் இல்லை எனில், வாழ்க்­கைத் தொழில் மேம்­பாட்டு வாய்ப்­பு­கள் சரி­யில்லை எனில், அத்­த­கைய வேலை­கள் ஏட்­டுக் கல்வி வேலை­க­ளை­விட தாழ்­வாகக் கரு­தப்­படும் எனில் விரும்­பிய பலன் ஏற்­ப­டாது," என்று அதி­பர் தெரி­வித்­தார்.

"தானி­யக்­க­ம­யம் கார­ண­மாக வேலை பாணி­கள் மாறு­கின்­றன. இப்­போ­தெல்­லாம் ஊழி­யர்­கள் சிக்­க­லான வேலை­க­ளைப் பார்க்க வேண்டி இருக்­கிறது. இந்­தச் சூழ­லில் ஏட்­டுக் கல்வி தொழில் கல்வி என்று வேலை­களைப் பிரித்­துப் பார்ப்­பது விர­ய­மான ஒன்று," என்று திரு­வாட்டி ஹலிமா கூறி­னார்.

தேர்ச்­சி­களை அடிப்­ப­டை­யாகக் கொண்ட வேலை­க­ளுக்கு அதிக முக்­கி­யத்­து­வம் தேவை என்று வலி­யு­றுத்­திய அதி­பர், தமது செய்­தி­யில் இதர இரண்டு அம்­சங்­க­ளைப் பற்­றி­யும் குறிப்­பிட்­டார்.

தொழிற்­சங்­கங்­கள் ஆற்­றும் பணி­கள் பற்றி குறிப்­பிட்ட அதி­பர், வேலை இடங்­களில் நியா­ய­மான நடை­முறை இருப்­பதை உறு­திப்­ப­டுத்­தும் வகை­யில் அந்­தச் சங்­கங்­கள், ஊழி­யர்­களை வலு­வாக தொடர்ந்து பிர­தி­நி­தித்து வந்­துள்­ள­தா­கக் குறிப்­பிட்­டார்.

உற்­பத்­தித்­தி­றன் உயர்­வுக்கு ஏற்ற சம்­ப­ள­மும் அதி­க­ரிக்­கும் படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முறை மேலும் பல துறை­களை உள்­ள­டக்க வேண்­டும் என்­றும் அதி­பர் வலி­யு­றுத்­தி­னார்.

கொவிட்-19 கார­ண­மாக ஏற்­பட்ட பொரு­ளி­யல் சவால்­களை­யும் உக்­ரேன் போரை­யும் கவ­னத்­தில் கொண்­டுள்ள சிங்­கப்­பூர், நல்­லி­ணக்­கம் மிகுந்த தொழி­லா­ளர்-முத­லாளி உற­வைத் தொடர்ந்து கொண்­டி­ருப்­ப­ப­தாக அதி­பர் தெரிவித்தார்.

வலு­வான முத்­த­ரப்பு உற­வு­தான் அந்த நல்­லி­ணக்­கத்­திற்­குக் கார­ணம் என்று அதி­பர் குறிப்­பிட்­டார்.

தொடக்­க­கால சிர­மங்­களை எப்­படி எல்­லாம் நாம் சமா­ளித்து வந்து இருக்­கி­றோம் என்­பதை மே தினம் நினை­வூட்டு­வ­தாகக் குறிப்­பிட்ட அதி­பர், ஐக்­கி­ய­மும் உறு­தி­யும்­தான் நம் வெற்றிக்கான முக்­கிய கார­ணங்­கள் என்­று தெரிவித்தார்.