பூங்காக்கள், வீதிகளின் பசுமை வளங்களை நிர்வகிக்க புது பாணி; கழகம் தொடங்குகிறது

பூங்காக்கள், வீதிகளின் பசுமை வளங்களை நிர்வகிக்க புது பாணி; கழகம் தொடங்குகிறது

2 mins read
d43acc11-58f1-4408-8635-95767853efc0
-

தேசிய பூங்­காக் கழ­கம், பூங்­காக்­க­ளை­யும் வீதிகளின் பசுமை வளங்களையும் நிர்­வ­கிக்க புதிய பாணி­யைத் தொடங்கியுள்ளது. பீஷான்-அங் மோ கியோ­வில் முதன்முதலாக அது தொடங்­கும்.­

முழு துறை­யை­யும் உள்­ள­டக்கி பசுமை நிர்­வா­கத்­தில் மேம்­பாட்­டைச் சாதிப்­பது அந்­தப் புதிய பாணி­யின் நோக்­கம்.

மின்­னி­லக்க கரு­வி­கள், உணர்­வுச் சாத­னங்­கள் ஆகி­ய­வற்றை முழு­மை­யா­கப் பயன்­படுத்தி கழ­கம் இதைச் செய்­யும்.

தாவ­ரங்­களில் உள்ள குறை­பா­டு­களை, நோய்­க­ளைக் கண்டு­பி­டிக்­கும் அதி­ந­வீன சாத­னங்­களைக்கொண்டு தொலை­தூ­ரத்­தில் இருந்து மரங்­களை மெய்­நிகர் ரீதி­யில் பரி­சோ­திப்­பது இதில் அடங்­கும். பழைய மரங்­களை மேலே சென்று பரி­சோதிக்க போதிய ஊழி­யர் வளம் இருப்­பது இதன் மூலம் உறுதி செய்­யப்­படும்.

மின்­னி­லக்க கரு­வி­கள், உணர்வுச் சாத­னங்­கள் மூலம் திரட்­டப்­படும் தக­வல்­கள் 'மாவென் 2' என்ற மத்­திய முறை­யில் சேக­ரிக்­கப்­படும்.

அந்த முறையை நிலவனப்பு நிறு­வ­னங்­கள் பயன்­படுத்­திக் கொண்டு முக்­கி­ய­மான தக­வல்­களைப் பெற­லாம்.

அவை தங்­கள் பணி நடை­மு­றை­களை மின்­னி­லக்­க­ம­ய­மாக்­க­லாம். இந்­தப் புதிய பாணி ஏற்­பாடு, ஒப்­பந்­தப்புள்ளி மூலம் பீஷான்-அங் மோ கியோ மாவட்­டத்­தில் முதன்­மு­த­லாக அமலாகும் என்று நேற்று தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ தெரி­வித்­தார்.

இதே­போன்ற ஒப்­பந்­தங்­கள் மூலம் சிங்­கப்­பூ­ரின் இதர பகுதி­களுக்­கும் இந்­தத் திட்­டம் விரிவு­படுத்­தப்­படும் என்று தெரி­வித்த அமைச்­சர், இந்­தப் புதிய பாணி மூலம் பூங்­காக் கழ­கம் அதி­ந­வீன மின்­னி­லக்க தொழில்­நுட்ப ஆற்­றல்­களை இத்­தொ­ழில்­து­றை­யின் எஞ்­சிய பகு­தி­க­ளுக்­கும் காலப்­போக்­கில் மாற்­றி­விட முடி­யும் என்று கூறி­னார்.

நிறு­வ­னங்­கள் உற்­பத்­தித்­திறனை மேம்­ப­டுத்தி தங்­க­ள் செயல்மு­றையை நவீ­னப்­ப­டுத்த உத­வு­வது இதன் நோக்­கம். அப்­படிச் செய்­வ­தன் மூலம் இந்­தத் தொழில்­து­றைக்­குப் பல­ரை­யும் கவர்ந்து ஈர்த்து அவர்­க­ளுக்­குப் பயிற்சி அளிப்­பதும் நோக்­கம்.

சிங்­கப்­பூர் நில வடி­வ­மைப்பு தொழில்­துறை சங்­கம் ஏற்­பாட்­டில் நடந்த பசுமை நிகழ்ச்சி ஒன்­றின் நான்­கா­வது நாளன்று அமைச்­சர் உரை­யாற்­றி­னார்.

இந்­தத் துறை­யில் மின்­னி­லக்­க­ம­யத்­திற்கு ஊக்­கு­விக்­கும் திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக கழகம் நேற்று புதிய $7.5 மில்­லி­யன் மானி­யத்தை அறி­வித்­தது.

நிலவனப்பு, விலங்கு தொழில்­து­றை­களில் தொழில்­நுட்ப முறை­களை உள்­ள­டக்­க­வும் உற்­பத்­தித்திற­னைப் பெருக்­க­வும் நிறு­வ­னங்­க­ளுக்கு அந்த நிதி ஆத­ரவு அளிக்­கும்.

'நிலவனப்பு விலங்கு துறை, உற்­பத்­தித்திறன் மானி­யம்' என்ற அந்த நிதி, நிறு­வ­னங்­கள், புத்­தாக்க சாத­னங்­களை வாங்கு­வ­தற்கு ஆகும் செலவை ஈடு­செய்ய பயன்­படும்.