நோன்புப் பெருநாளின் மகிமை யைப் பறைசாற்றும் வகையில் சமூக நலனிற்காக பாடுபட்ட முஸ்லிம் தொண்டுழியர்களைக் கெளரவித்த ஒன்றுகூடல் நிகழ்ச்சி 'வலிமையான தேசத்திற்காக உழைக்கும் குடிமக்கள்' எனும் கருப்பொருளில் கடந்த 28ஆம் தேதி நடந்தது.
மரினா பே சேண்ட்சில் நடந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட சமூக தலைவர்கள், ஆதரவாளர்கள் வெளிநாட்டுப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.
துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங், மூத்த அமைச்சரும் தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
சமூக நலனிற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட 31 முஸ்லிம்களுடன் திரு வோங் கலந்துரையாடி அவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார்.
"கொவிட்-19 நெருக்கடி காலகட்டத்திலும் ஒன்றுபட்ட சமூகமாக நாம் மீண்டெழுந்தது நம் வலிமையைக் காட்டுகிறது.
"தன்னம்பிக்கை வாய்ந்த குடும்பங்கள் நிறைந்த சமூகமாக நாம் தொடர்ந்து உருவெடுக்க வேண்டும்," என சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சரும் முஸ்லிம் விவ காரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான மசகோஸ் ஸுல்கிஃப்லி கூறினார்.

