அதிக தேவை; வீவக ஐந்தறை வீடு வாடகை $6,000க்கும் மேல்

அதிக தேவை; வீவக ஐந்தறை வீடு வாடகை $6,000க்கும் மேல்

1 mins read
19229395-4bfa-4c86-a8b0-5f62993cefe8
-

சிங்­கப்­பூ­ரில் வீட்டு வாடகை கடந்த மார்ச் மாதம் புதிய உச்­சத்தை எட்­டி­ய­தைத் தொடர்ந்து, உல­க­ள­வில்­ நி­யூ­யார்க்கை முந்தி ஆக அதிக வாடகை உயர்வைக் கொண்ட நக­ர­மாக சிங்­கப்­பூர் திகழ்­கிறது.

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக சந்­தையை வாடகை அதி­க­ரிப்பு விட்­டு­வைக்­க­வில்லை. அங் மோ கியோ, கெண்­டன்­மண்ட் சாலை­யில் உள்ள சில ஐந்­தறை வீடு­க­ளுக்கு மாத வாட­கை­யாக $6,000க்கு­மேல் வசூ­லிக்­கப்­ப­டு­கின்­றன.

2019லிருந்து 2021 வரை தனி­யார் வீட்டு வாடகை 9.3 விழுக்­காடு கூடி­யது.

ஆண்டு அடிப்­ப­டை­யில் கடந்த ஆண்டு அது 29.7 விழுக்­காடு எகி­றி­யது. 2007க்குப் பதி­வான ஆக வேக­மான வளர்ச்சி இது­வா­கும்.

வீவக வீட்டு வாடகை 15 ஆண்­டு­களில் ஆக வேக­மான வளர்ச்சி கண்டு 28.6 விழுக்­காடு கூடி­யது.

வீட்­டுக் கட­னுக்­கான வட்டி விகி­தம், வரி, பண­வீக்­கம் உயர்ந்­த­தால், வீட்டு உரி­மை­யாளர்­கள் பல­ரும் செலவு அதி­க­ரிப்பை வாட­கை­தா­ரர்­க­ளி­டம் தள்­ளி­விட்­ட­னர்.

கொவிட்-19 பெருந்­தொற்று நில­வ­ரம் சீர­டைந்து வெளி­நாட்­டுப் பய­ணங்­கள் வழக்­க­நி­லைக்­குத் திரும்­பி­ய­தைத் தொடர்ந்து வெளி­நாட்டு ஊழி­யர்­கள், வெளி­நாட்டு மாண­வர்­கள், நிரந்­த­ர­வாசி­க­ளின் வரு­கை­யால் வாடகை கூடி­யது.

கடந்த பிப்­ர­வ­ரி­யில் வீவக வீட்டு வாடகை முன்­னெப்­போதும் இல்­லாத அளவை எட்­டி­யது. அங் மோ கியோ அவென்யூ 10ல் உள்ள ஐந்­தறை வீடு $6,500க்கு வாட­கைக்கு விடப்­பட்­டது.

மறு­விற்­பனை வீட்­டிற்­கான ஆக அதிக வாடகை இது. கெண்­டன்­மண்ட் சாலை­யில் உள்ள மற்­றொரு ஐந்­தறை வீடு அதே மாதம் $6,250க்கு வாட­கைக்கு விடப்­பட்­டது.