உதவிக்கரம் நீட்டியோருக்கு அங்கீகாரம், பதக்கம்

உதவிக்கரம் நீட்டியோருக்கு அங்கீகாரம், பதக்கம்

2 mins read
833ac2b6-839a-4d7d-805f-12175b873f1b
-

கரு­ணா­நிதி துர்கா

கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக சிங்­கப்­பூ­ரர்­கள் கொவிட்-19 நோய்ப் பர­வலை எதிர்த்து வரும் கால­கட்­டத்­தில் சமூக, அடித்­தள தொண்­டூ­ழி­யர்­கள் தங்­க­ளது முழு முயற்­சி­யை­யும் அர்ப்­பணிப்­பை­யும் கொடுத்­துள்­ள­னர்.

அவர்­க­ளின் கடின உழைப்பை அங்­கீ­க­ரிக்­கும் நோக்­கத்­து­டன் ஏப்­ரல் 30ஆம் தேதி­யன்று புக்­கிட் பாஞ்­சாங் சமூக மன்­றத்­தில் ஒரு நிகழ்ச்சி ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

370க்கும் மேற்­பட்ட அடித்­தள தலை­வர்­கள், சமூகத் தொண்­டூ­ழி­யர்­கள், ஊழி­யர்­க­ளின் குறிப்­பி­டத்­தக்க பங்­க­ளிப்பை அங்­கீ­கரிக்­கும் வகை­யில் அவர்­களுக்குப் பதக்­கங்­கள் வழங்­கப்­பட்­டன. கொவிட்-19 நோய்ப் பர­வ­லி­னால் உல­கம் முழுக்க கடு­மை­யான சமூக, பொரு­ளி­யல் இடை­யூ­று­கள் ஏற்பட்டன.

விநி­யோக இடை­யூ­று­க­ளி­னா­லும் மக்­கள் பதற்­றத்­தி­னால் அள­வுக்கு அதி­க­மான பொருள்­களை வாங்­கியதாலும் உல­க­ள­வில் பொரு­ளி­யல் மந்­த­நி­லை­யும் விநி­யோக பற்­றாக்­கு­றை­யும் ஏற்­பட்­டது.

அது­மட்­டு­மல்­லா­மல், 2020யிலும் 2021யிலும் பல நிகழ்ச்­சி­கள் ரத்து செய்­யப்­பட்­டன.

அக்­கா­லகட்­டத்­தில் பல்­வேறு கொவிட்-19 இயக்­கங்­களில் புக்­கிட் பாஞ்­சாங் அடித்­தள, சமூக தொண்­டூ­ழி­யர்­கள் முக்­கிய பங்கு வகித்­த­னர்.

முகக்­க­வ­சங்­க­ளை­யும் டிரேஸ்டுகெதர் சாத­னங்­க­ளை­யும் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு விநி­யோ­கிப்­ப­தில் இவர்­கள் ஈடு­பட்­டி­ருந்­த­னர். அது­மட்­டு­மல்­லா­மல், பல தொண்­டூ­ழி­யர்­கள் கொவிட்-19 தடுப்­பூசி மையங்­களில் உதவி செய்­த­தோடு மக்­க­ளுக்குத் தடுப்­பூசி பற்­றிய விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தி­னர்.

"சமூ­கத்­திற்குப் பங்­காற்­றிய அனை­வ­ருக்­கும் எனது மன­மார்ந்த நன்­றியைத் தெரி­விக்க விரும்­பு­கி­றேன். நாம் தொடர்ந்து ஒற்­று­மை­யு­ணர்ச்­சி­யு­டன் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் கைகொ­டுக்க வேண்­டும்," என்று புக்­கிட் பாஞ்­சாங் அடித்­தள அமைப்­பு­க­ளின் ஆலோ­ச­க­ரான திரு லியாங் எங் ஹுவா கூறி­னார்.

மேலும், இந்­நி­கழ்ச்­சி­யில் தொற்­று­நோய்­க­ளுக்­கான தேசிய நிலை­யத்­தின் நிர்­வாக இயக்குநரான பேரா­சி­ரி­யர் லியோ யீ சின்­னு­டன் ஒரு கலந்­து­ரை­யா­டல் நடத்­தப்­பட்­டது.

"கிட்­டத்­தட்ட 30 ஆண்­டு­களாக நான் தொண்­டூ­ழிய சேவை­யில் ஈடு­பட்­டுள்­ளேன். சிறு வய­தில் என் தாயார் பல பிள்­ளை­களுக்கு இசை, நட­னம் என பல கலை­களைக் கற்­றுக்­கொ­டுப்­ப­துண்டு. இதைப் பார்த்து எனக்­கும் பிற­ருக்கு உதவ வேண்­டும் என்ற ஆசை­யும் ஆர்­வ­மும் உதித்­தது," என்று புக்­கிட் பாஞ்­சாங் சமூக மன்ற இந்­தி­யர் நற்­பணி செயற்­கு­ழு­வின் தலை­வ­ரான திரு­மதி ராமா பிபி­எம், 82, கூறி­னார்.

விருது வழங்­கப்­பட்டு அங்­கீ­கரிக்­கப்­பட்­ட­வர்­க­ளுள் இவ­ரும் ஒரு­வர். அர­சாங்­கம் பல ஆதரவுத் திட்­டங்­களை அறி­மு­கப்­ப­டுத்­தி­னால் நாமும் ஒரு சமூ­க­மாக ஒன்­றி­ணைந்து செயல்­பட வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­னார் இவர்.