பூனை வதை அதிகரிப்பு; கூடுதல் பாதுகாப்புக்கு அழைப்பு

பூனை வதை அதிகரிப்பு; கூடுதல் பாதுகாப்புக்கு அழைப்பு

2 mins read
ad632d7b-00f3-4dc0-9396-dcfda043e0ca
-

இவ்­வாண்டு சிங்­கப்­பூ­ரில் பூனை வதைச் சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை முன்­னெப்­போ­தும் இல்­லாத அள­வுக்கு அதி­க­ரித்­துள்­ள­தாக விலங்கு வதை தடுப்பு சங்கத்தின் நிர்­வாக இயக்­கு­நர் ஆர்த்தி சங்­கர் தெரி­வித்­துள்­ளார். இத­னால் பூனை­க­ளைப் பாது­காக்க கூடு­தல் நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டும் என்று குரல்­கள் எழுந்­துள்­ளன.

2019ஆம் ஆண்­டி­லி­ருந்து கடந்த ஆண்டு வரை ஒவ்­வோர் ஆண்­டி­லும் 60 விலங்கு வதை சம்­ப­வங்­கள் பதி­வா­கி­ய­தாக விலங்கு, விலங்கு மருத்­து­வச் சேவை தெரி­வித்­தது.

இவ்­வாண்டு ஜன­வரி மாதத்­துக்­கும் மார்ச் மாதத்­துக்­கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் 11 பூனை வதைச் சம்­ப­வங்­கள் குறித்து விலங்கு வதை தடுப்பு மன்­றம் விசா­ரணை நடத்­தி­யது.

கடந்த ஆண்­டில் 16 பூனை வதை சம்­பவங்­கள் குறித்­தும் 2021ஆம் ஆண்­டில் 11 பூனை வதைச் சம்­ப­வங்­கள் தொடர்­பா­க­வும் விசா­ரணை நடத்­தப்­பட்­ட­தாக சங்கம் கூறி­யது.

ஆனால் இவ்­வாண்­டில் முதல் மூன்று மாதங்­க­ளி­லேயே அதி­க­மான பூனை வதைச் சம்­ப­வங்­கள் நிகழ்ந்­தி­ருப்­பதை மன்­றம் சுட்­டி­யது.

பூனை­களை மீட்­ப­தை­யும் தாண்டி பூனை­க­ளைப் பாது­காப்­பதில் தனது பங்­க­ளிப்பை சங்கம் விரி­வு­ப­டுத்­தி­யி­ருப்­ப­தாக பூனை நல சங்கத்தின் தலை­வர் தேனுகா விஜய்­கு­மார் தெரி­வித்­துள்­ளார்.

"தக­வல் சேக­ரிப்பு, பூனை வதை மற்­றும் பாது­காப்பு தொடர்­பாக பொது­மக்­க­ளி­டையே விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­து­வது ஆகி­ய­வற்­றி­லும் சங்கம் ஈடு­ப­டு­கிறது. இரண்டு வாரங்­க­ளுக்கு ஒரு­முறை பூனை வதைச் சம்­ப­வங்­கள் குறித்து தக­வல் சேக­ரிப்­ப­து­டன் விலங்கு, விலங்கு மருத்­துவச் சேவை­யு­டன் இணைந்து செயல்­ப­டு­கி­றோம்," என்­றார் தேனுகா.

இதற்­கி­டையே, சலிப்­புத்­தன்மை, குடும்ப வன்­முறை போன்­ற­வற்­றால் சிலர் விலங்­கு­களைத் துன்­பு­றுத்­து­வ­தாக உள­வி­யல் நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

தனிமை, விரக்தி போன்ற உணர்­வு­க­ளால் பாதிக்­கப்­படும் சிலர் அவற்­றி­லி­ருந்து விடு­படும் நோக்­கில் விலங்­கு­க­ளைத் துன்­பு­றுத்­து­வ­தாக மூத்த தட­ய­வி­யல் உள­வி­யல் நிபு­ணர் ஜூன் போங் தெரி­வித்­தார்.