வீவக சேவை, பராமரிப்புக் கட்டணம் அதிகரிக்கக்கூடும்

வீவக சேவை, பராமரிப்புக் கட்டணம் அதிகரிக்கக்கூடும்

2 mins read
9240376a-1465-445b-ac4b-319944221ca8
-

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்­கான சேவை, பரா­ம­ரிப்­புக் கட்­ட­ணம் அதி­க­ரிக்­கக்­கூ­டும். இருப்­பி­னும், இந்­தக் கட்­டண ஏற்­றத்­தால் ஏற்­படும் தாக்­கத்­தி­லி­ருந்து குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு நிவா­ர­ணம் அளிக்­கும் வகை­யில் அர­சாங்­கம் தற்­கா­லிக ஆத­ரவு வழங்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சேவை, பரா­ம­ரிப்­புக் கட்­ட­ணத்தை எந்த அள­வுக்கு உயர்த்­தி­னால் நியா­ய­மா­ன­தாக இருக்­கும் என்­பது குறித்து நகர மன்றங்­கள் தற்­போது ஆராய்ந்து வரு­கின்­றன. கூடிய விரை­வில் இது­தொ­டர்­பான விவ­ரங்­கள் வெளி­யி­டப்­படும் என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழி­டம் மக்­கள் செயல் கட்­சி­யின்­கீழ் இயங்­கும் நகர மன்­றங்­க­ளின் ஒருங்­கி­ணைப்­புத் தலை­வர் லிம் பியோ சுவான் கூறி­னார்.

சேவை, பரா­ம­ரிப்­புக் கட்­ட­ணம் ஆக கடை­சி­யாக 2017ஆம் ஆண்­டில் உயர்த்­தப்­பட்­டது. கட்­ட­ணம் $1லிருந்து $17 வரை ஏற்­றம் கண்­டது. கட்­டண உயர்வு இரண்டு ஆண்­டு­களில் படிப்­ப­டி­யாக நடப்­புக்கு வந்­தது.

சேவை, பரா­ம­ரிப்­புக் கட்­ட­ணம் மூலம் வசூ­லிக்­கப்­படும் தொகை குடி­யி­ருப்­புப் பேட்­டை­களைச் சுத்­தம் செய்­வ­தற்­கா­க­வும், நில­வ­னப்­புப் பணி­க­ளுக்­கா­க­வும் குப்­பை­களை அகற்­று­வ­தற்­கா­க­வும் இயந்­தி­ரங்­கள் மற்­றும் மின்­சா­ரக் கரு­வி­க­ளைப் பரா­ம­ரிப்­ப­தற்­கா­க­வும் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கிறது. கட்­ட­ணங்­கள் உயர்த்­தப்­பட்­ட­தும் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு உத­வும் வகை­யில் ஒரு குறிப்­பிட்ட கால­கட்­டத்­துக்­குச் சிறப்பு ஆத­ர­வுத் தொகை வழங்­கப்­படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ நாடா­ளு­மன்­றத்­தில் எழுத்­து­பூர்­வ­மா­கத் தெரி­வித்­தார்.

கடந்த மாதம் 21ஆம் தேதி­யன்று புக்­கிட் பாத்­தோக் தனித்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் முரளி பிள்ளை கேட்ட கேள்­விக்கு விளக்­கம் அளிக்­கும் வகை­யில் அமைச்­சர் லீயின் பதில் அமைந்­தது.

எரி­சக்தி விலை­கள், பரா­ம­ரிப்­புச் செல­வி­னங்­கள், மனி­த­வளச் செல­வி­னங்­கள் ஆகி­யவை அதி­க­ரித்­தி­ருப்­ப­தா­லும் அத­னால் நகர மன­றங்­க­ளு­கக்­குக் கூடு­தல் செல­வு­கள் ஏற்­ப­டு­வ­தா­க­வும் திரு லிம் கூறி­னார். 2018ஆம் ஆண்­டுக்­கும் இவ்­வாண்­டுக்­கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் எரி­சக்தி விலை­கள் 23 விழுக்­காடு அதி­க­ரித்­தி­ருப்­பதை அவர் சுட்­டி­னார்.