சிறப்புமிக்க இயல்புகளோடு உலகை தொடர்ந்து கவர்வோம்

3 mins read
661155dd-3019-4a35-a376-f13c62d81085
-

சிறந்தவர்களாக, நம்பிக்கையுடன் தொடர்ந்து வெல்ல துணைப் பிரதமர் அறைகூவல்

உல­கப் பொரு­ளி­யல் சூழ்­நிலை சரி­யில்லை. இந்­தச் சூழ­லில் சிங்­கப்­பூர் தனக்கே உரிய சிறப்பு அம்­சங்­க­ளு­டன் தொடர்ந்து திகழ்ந்து உல­கைக் கவர வேண்டும் என்று துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் வலி­யு­றுத்­திக் கூறி இருக்­கி­றார்.

"மற்­ற­வர்­க­ளை­விட சிங்­கப்­பூ­ரர்­கள் கடும் உழைப்­பா­ளி­களாக, விவே­க­மிக்­க­வர்­க­ளா­கத் தொடர்ந்து திகழ வேண்­டும்.

"பெரும்­பா­லா­ன­வர்­க­ளை­விட நாம் சிறந்­த­வர்­கள். சிங்­கப்­பூரை எப்­போ­துமே நம்­ப­லாம் என்ற சிறப்பு இயல்­பு­க­ளு­டன் நாம் தொடர்ந்து திகழ்ந்து வர வேண்­டும்," என்­று அவர் கூறினார்.

"பொரு­ளி­ய­லைக் கரு­மேகங்­கள் சூழ்ந்து இருந்­தா­லும் ஒரு­போ­தும் நாம் அச்­ச­ம­டை­யக் கூடாது. நம்­பிக்­கையை விட்­டு­வி­டக்கூடாது. சிங்­கப்­பூர் சிறிய நாடாக இருக்­க­லாம். ஆனால், அந்­தச் சிறிய நாடு முன் ஒரு­போ­தும் இல்­லாத அள­வுக்கு இப்­போது பிர­கா­ச­மாக ஒளி­விட்டு வரு­கிறது," என்­பதை அவர் சுட்டிக்­காட்­டி­னார்.

"சிங்­கப்­பூர் தன்­னு­டைய ஆற்­றல்­க­ளி­லும் பலத்­தி­லும் தொடர்ந்து ஒரு­மித்த கவ­னத்­தைச் செலுத்தி வந்­தால், உல­கத்­திற்கு நன்மை தரக்­கூ­டிய வழி­களை அது கண்டு வந்­தால் சிங்­கப்­பூர் நல்ல வாழ்வை, செழிப்பை அனு­ப­விக்­கும்," என்று திரு வோங் குறிப்­பிட்­டார்.

"உல­கம் ஆபத்­து­மிக்­க­தா­க­வும் தொல்­லை­மிக்­க­தா­க­வும் ஆகி வரு­கிறது. இந்­தச் சூழ­லில் தன்­னு­டைய பொரு­ளி­யலை வளர்ச்­சி­ய­டை­யச் செய்­வ­தும் வேலை­களை உரு­வாக்­கு­வ­தும் சிங்­கப்­பூ­ருக்கு சிர­ம­மா­ன­தா­கவே இருக்­கும்," என்று அவர் தெரி­வித்­தார்.

"வர்த்­தக விதி­மு­றை­கள் மாறு­கின்­றன. புவி­சார் அர­சி­யல் நில­வ­ரங்­கள் மாற்­றம் அடை­கின்­றன. அவை கார­ண­மாக முத­லீ­டு­க­ளின் போக்கு மாறு­கிறது. முன்­னே­றிய பொரு­ளி­ய­லைக் கொண்ட நாடு­கள் அதிக மானி­யங்­களைக் கொடுத்து முக்­கி­ய­மான நிறு­வ­னங்­களைத் தக்­க­வைத்­துக் கொள்ள முயல்­கின்­றன.

"இவற்­றின் விளை­வாக முத­லீ­டு­க­ளைக் கவர்­வ­தற்­கான போட்டி மிகக் கடு­மை­யா­ன­தாக ஆகி­விடும்.

"இருந்­தா­லும் கெட்­டிக்­கா­ரத்­தனம், புத்­தாக்­கம் ஆகி­ய­வற்­றோடும் துணிச்­சல், விடா­மு­யற்சி­யோ­டும் கூடிய சிங்­கப்­பூர் எவ்­வ­ளவு சிர­மங்­க­ளை­யும் சமா­ளித்து முன்­னே­றும்," என்று மே தினப் பேர­ணி­யில் துணைப் பிர­த­மர் குறிப்­பிட்­டார்.

"சிங்­கப்­பூர் கடந்த காலத்­தில் மிகப் பெரிய சவால்­களை எல்­லாம் கடந்து வந்­தி­ருக்­கிறது. அந்­தச் சாத­னை­களை அது தொட­ரும்," என்­றும் திரு வோங் தெரி­வித்­தார்.

சன்­டெக் சிங்­கப்­பூர் மாநாட்டு, கண்­காட்சி மையத்­தில் தொழிற்­சங்­க­வா­தி­கள், ஊழி­யர்­க­ளி­டையே உரை­யாற்­றிய திரு வோங், பொரு­ளி­யல் எதிர்­நோக்­கும் சிர­ம­மான சூழ்­நி­லை­களை விளக்­கி­னார்.

வர்த்­த­கத்­தைப் பொறுத்­த­வரை நாடு­கள் இனி­மேல் அனை­வ­ருக்­கும் வெற்றி என்ற அடிப்­ப­டை­யி­லான ஒத்­து­ழைப்பை நோக்கி செயல்­பட இய­லாது என்று அவர் குறிப்­பிட்­டார்.

புவி­சார் அர­சி­யல் நில­வ­ரங்­கள் கார­ண­மாக உலக முத­லீ­டு­கள் வரத்து மெது­வ­டை­யும் என்று அவர் கூறி­னார்.

கணி­னிச் சில்­லு­கள், பசுமை எரி­சக்தி போன்ற முக்­கி­ய­மான தொழில்­து­றை­களில் உள்­நாட்டு உற்­பத்தி ஆற்­ற­லைப் பலப்­ப­டுத்­தும் வகை­யில் முன்­னே­றிய நாடு­கள் நிறு­வ­னங்­க­ளுக்கு அதிக அள­வில் மானி­யங்­களை வழங்­கத் தொடங்கி இருக்­கின்­றன என்­பதை அவர் சுட்­டினார்.

"கொவிட்-19 சூழ்­நிலை கார­ண­மாக உல­க­ள­வில் சிங்­கப்­பூ­ரின் நற்­பெ­யர் மேம்­பட்டு இருக்­கிறது. தொழில் நடத்­து­வ­தற்கு நம்­பத்­தகுந்த ஓர் இட­மாக சிங்­கப்­பூர் கரு­தப்­ப­டு­கிறது.

"இந்த வாய்ப்பை சிங்­கப்­பூர் நன்கு பயன்­ப­டுத்­திக்­கொண்டு இன்­னும் போட்­டித்­தி­றன் வாய்ந்த நாடாக அது திகழ வேண்­டும். அதோடு, உல­கிற்கு ஏற்ற ஒரு நாடா­க­வும் தொடர்ந்து இருந்து வர­வேண்­டும்," என்று நிதி அமைச்­ச­ரு­மான திரு வோங் வலி­யு­றுத்­தி­னார்.

சாங்கி முனை­யம் 5, துவாஸ் துறை­மு­கம் போன்ற உள்­கட்டமைப்பு இணைப்பு வச­தி­களில் தொடர்ந்து முத­லீடு செய்­வது நம்­மு­டைய உத்தி என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

புத்­தாக்­கத்­திற்­கான சிங்கப்­பூ­ரின் ஆற்­றல்­க­ளைப் பலப்­ப­டுத்­து­வது மற்­றோர் உத்தி என்­றா­ர­வர்.