தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஊழியர்கள், இளையோருக்கு இன்னும் சிறப்பாக என்டியுசி உதவ வலியுறுத்து

2 mins read
ae3bbff9-78de-4b84-9aa0-e5e3cba63087
-

தேசிய தொழிற்­சங்­க காங்­கி­ரஸ் (என்­டி­யுசி) ஊழி­யர்­க­ளின் சம்­ப­ளத்தை அதி­க­ரிக்­க­வும் அவர்­களின் நல்­வாழ்வை மேம்­ப­டுத்­த­வும் இட­ம்பெ­றக்­கூ­டிய இப்­போதைய முயற்­சி­களை ஆத­ரித்து அவற்­றுக்கு உர­மேற்றி வரு­கிறது.

அதே­வே­ளை­யில், பட்­டத்­தொழி­லர்­கள், நிர்­வா­கி­கள், மேலா­ளர்­க­ளுக்­கும் (பிஎம்இ) இளை­ய ருக்­கும் அது இன்­னும் சிறப்­பாக உதவ வேண்­டும் என்று வலியுறுத்­தப்­பட்டு உள்­ளது.

"எளி­தில் பாதிக்­கப்­படக்­கூடிய ஊழி­யர்­க­ளுக்கு உத­வு­வதில் என்டி­யுசி பல முன்னேற்றங்­களைச் சாதித்­துள்­ளது. வாழ்க்கைச் செலவைக் குறைக்க உதவியிருக்­கிறது.

"ஆனால் அந்த இரண்டு பிரி­வி­ன­ருக்­கும் போதிய அள­வுக்கு என்­டி­யுசி இன்­ன­மும் உத­வ­வில்லை," என்று அதன் தலை­மைச் செய­லா­ளர் இங் சீ மெங் நேற்று தனது மே தினச் செய்­தி­யில் தெரி­வித்­தார்.

சன்­டெக் சிங்­கப்­பூர் மாநாட்டு, கண்­காட்சி மையத்­தில் உரை­யாற்றிய அவர், மனி­த­வ­ளத் துறை­யைச் சேர்ந்த 12,000 பேரை நியா­ய­மான வேலை நடை­முறை ஏற்­பாட்­டின்­கீழ் கொண்டு வரு­வது, பிஎம்இ ஊழி­யர்­க­ளுக்கு உத­வும் அத்­த­கைய முயற்­சி­களின் ஒரு பகுதி என்­றார்.

இளை­ய­ரைப் பொறுத்­த­வரை, இன்­னும் சிறந்த முறை­யில் அவர்­க­ளுக்கு உத­வ­லாம் என்­பதை என்­டி­யுசி அங்­கீ­க­ரிப்­ப­தாக அவர் கூறி­னார்.

இதைக் கருத்­தில்கொண்டு ஓராண்­டுக்கு முன் இளை­யர் சிறப்­புப் பணிக்­குழு ஒன்றை என்­டி­யுசி தொடங்­கி­யதை திரு இங் சுட்­டி­னார்.

அந்­தப் பணிக்­குழு 10,000 இளை­யரை ஈடு­ப­டுத்தி அவர்­களின் முக்­கி­ய­மான அக்­க­றை­களை, கவலைகளைத் தெரிந்து­கொண்­டுள்­ளது. இளை­யர்­கள் தெரி­வித்­த­வற்­றைக்கொண்டு முத­லா­ளி­க­ளு­டன் சேர்ந்து 'வாழ்க்­கைத்­தொ­ழில் தொடக்­கப் பயி­ல­கம்' என்ற முன்­னோ­டித் திட்­டத்தை என்­டி­யுசி வடி­வ­மைத்­தது.

அந்­தத் திட்­டம் இந்த ஆண்டு பிற்­பா­தி­யில் தொடங்க உள்­ளது.

பள்­ளிப் படிப்­பிற்கு, தேசிய சேவைக்­குப் பிறகு இளை­யர்­கள் வேலை ஒன்­றைத் தொடங்க அந்­தத் திட்­டம் வழி வகுக்­கும்.

அதே வேளை­யில், முத­லா­ளி­கள் ஊழி­ய­ரைக் கவர்ந்து அவர்­களைத் தக்­க­வைத்­துக்­கொள்­ள­வும் அது உத­வும்.

ஊழி­யர் அணி­யும் பொரு­ளி­யல் நில­வ­ரங்­களும் மாறி வரு­கின்­றன. அதற்­கேற்ப என்­டி­யு­சி­யின் செயல்­மு­றை­களும் உறுப்­பி­ய­மும் பயிற்சி மாதி­ரி­களும் கடந்த நான்கு ஆண்­டு­களில் பரந்த அள­வில் திருத்தி அமைக்­கப்­பட்டு இருக்­கின்­றன.

அந்­தச் சீர­மைப்பை அடுத்து இளை­யர்­கள், பிஎம்இ ஊழி­யர்­களின் நல­னில் கவ­னம் செலுத்­தப்­ப­டு­கிறது. பயிற்­சி­க­ளைப் பொறுத்­த­வரை பயிற்சி, உரு­மாற்­றக் குழு­மம் ஒன்றை என்­டி­யுசி அமைத்து இருக்­கிறது.

ஸ்டாண்­டர்ட் சார்டர்ட் வங்­கி­யு­டன் சேர்ந்து 'டிரஸ்ட் பேங்க்' என்ற வங்கி மூல­மாக மின்­னி­லக்க வங்­கித் தொழி­லி­லும் என்­டி­யுசி வெற்­றி­க­ர­மான முறை­யில் ஈடு­பட்டு இருக்­கிறது என்று திரு இங் குறிப்­பிட்­டார்.

இந்த மாற்­றங்­கள் கார­ண­மாக என்­டி­யு­சி­யின் உறுப்­பி­னர்­க­ளுக்கு லாப­ஈவு கிடைத்து இருக்­கிறது. உறுப்­பி­னர்­க­ளின் எண்­ணிக்கை 2019ல் 980,000 ஆக இருந்­தது. அது இப்­போது 1.12 மில்­லி­ய­னா­கக் கூடி இருக்­கிறது என்று திரு இங் தெரி­வித்­தார். 2030ல் 1.5 மில்­லி­யன் உறுப்­பி­னர்­கள் என்ற இலக்கை நிறை­வேற்­று­வது இனி­மேல் சிர­ம­மல்ல என்­றா­ர­வர்.