டிபிஎஸ் உணவு மானியத் திட்டத்திற்கு பேராதரவு

டிபிஎஸ் உணவு மானியத் திட்டத்திற்கு பேராதரவு

1 mins read
7af8620e-22f0-4000-b1e3-ac1a7aa65b24
-

டிபி­எஸ் வங்கி பிப்­ர­வரி 10ஆம் தேதி 5 மில்­லி­யன் உண­வங்­காடி உணவு மானி­யத் திட்­டத்­தைத் தொடங்­கி­யது. அது முதல் ஒரு மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட உணவு மானி­யங்­கள் பெற்­றுக்­கொள்­ளப்­பட்டுள்­ள­தாக அந்த வங்கி நேற்று தெரி­வித்­தது.

உணவைப் பெற்­றுக்­கொண்­டோ­ரில் 12 விழுக்­காட்­டி­னர் முதி­யோர். 24 விழுக்­காட்­டி­னர் மாதம் $2,500க்கும் குறை­வா­கச் சம்­பா­திப்­ப­வர்­கள்.

உண­வங்­கா­டிக் கடை­களில் 'பேலா!' செய­லியைப் பயன்­படுத்தியுள்ள 62 வய­துக்­கும் மேற்­பட்ட முதி­யோ­ரின் எண்­ணிக்கை நான்கு மடங்கு அதி­க­ரித்து இருக்­கிறது என்­றும் இந்த உணவு மானியத் திட்­டத்­திற்கு பேரா­த­ரவு கிடைத்து வரு­கிறது என்­றும் டிபிஎஸ் வங்கி குறிப்­பிட்­டது.

பண­வீக்­கம் கார­ண­மாக பாதிக்­கப்­பட்டு உள்ள மக்­களின் சாப்­பாட்­டுச் செலவை ஓர­ளவு ஈடு­கட்­டு­வது இந்­தத் திட்­டத்­தின் நோக்­கம்.

டிபி­எஸ் வங்­கி­யின் பேலா! செய­லியைப் பயன்­ப­டுத்தி பணம் செலுத்­து­வோ­ருக்கு $3 கழி­வுத் தொகை­யாக திரும்பக் கிடைக்கும்.

அந்­தச் செய­லியை சிங்­கப்­பூர் முழுவதும்­ செயல்­படும் SGQR என்ற குறி­யீட்­டைப் பயன்­ப­டுத்­தும் 11,600க்கும் மேற்­பட்ட உண­வங்­கா­டிக் கடை­களில் பயன்­ப­டுத்­த­லாம்.

இந்த அனு­கூ­லம் அடுத்த ஆண்டு ஜன­வரி 19ஆம் தேதி வரை ஒவ்­வொரு வெள்­ளிக்­கிழமையும் முத­லா­வ­தாக உணவு வாங்­கும் 100,000 பேருக்குக் கிட்­டும்.

இந்­தத் திட்­டத்­தின் மூலம் உண­வங்­கா­டிக் கடை­க­ளுக்கு வியா­பா­ரம் அதி­கரித்து இருக்­கிறது. தங்­க­ளு­டைய வாராந்­திர வரு­வாய் 15% முதல் 25% வரை கூடி­யி­ருப்­ப­தாக சில கடைக்­காரர்­கள் தெரி­வித்­த­னர்.