குடும்பத்தினர் சூழ்ந்திருக்க வீட்டிலேயே உயிர்விடும் நோயாளியின் ஆசை நிறைவேறியது

குடும்பத்தினர் சூழ்ந்திருக்க வீட்டிலேயே உயிர்விடும் நோயாளியின் ஆசை நிறைவேறியது

2 mins read
06fca234-3461-492f-84ae-86af18363935
-

மருத்­து­வ­ம­னை­யில் இருக்­கும்­போது திரு ஹோங் காவ், தன்­னா­ல் அங்­கி­ருக்க முடி­யாது. விரை­வில் வீட்­டுக்கு அழைத்­துச் செல்­லு­மாறு தொந்­த­ரவு செய்­வார்.

"எனது தந்­தை­யார் பல­வீ­ன­மாக இருந்­தா­லும் தெளி­வான நினை­வு­டை­ய­வ­ராக இருந்­தார். கடந்த ஆண்டு நவம்­பர் 4ஆம் தேதி அவர் தனது தூக்­கத்­தில்­ இருந்து எழுந்­தி­ருக்­க­வில்லை என்ற கார­ணத்­தால் நாங்­கள் அவரை அவ­சர மருத்­துவ வண்டி மூலம் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு சென்­றோம்.

"அங்கு சென்­ற­போது அவ­ரது இத­யத்­து­டிப்பு நின்­று­விட்­டது என்று குறிப்­பிட்ட மருத்­து­வர்­கள் அவரை இதய இயக்க மீட்பு சிகிச்சை மூலம் இத­யத்­து­டிப்பை மீண்­டும் இயங்க வைத்­த­னர்," என்­றார் அவ­ரது 46 வயது மகள் ஹோங் போ கோர்.

தீவிர சிகிச்­சைப் பிரி­வில் இருந்த தந்­தை­யின் சுய­நி­னைவு திரும்­பாத நிலை­யில், வீட்­டில் தனது விருப்­ப­மான சாய்வு நாற்­கா­லி­யில் அமர்ந்­த­வாறே உயிர்­விட வேண்­டும் என்ற அவ­ரது கடைசி ஆசையை நிறை­வேற்ற அவ­ரது குடும்­பம் முடிவு செய்­தது.

அடுத்த இரண்டு நாள்­களில் அவர் வீட்­டுக்­குக் கொண்டு வரப்­பட்­டார். இங் டெங் ஃபோங் மருத்­து­வ­ம­னை­யின் 'ஐஎம்­கோ­யிங்­ஹோம்' திட்­டத்­தின்­கீழ் வீட்­டுக்­குக் கொண்டு வந்து ஒன்­றரை மணி­நே­ரத்­துக்­குள் 83 வயது திரு ஹோங் தனது சாய்வு நாற்­கா­லி­யில் சாய்ந்­த­வாறே உயிர் நீத்­தார். அப்­போது அவ­ரது குடும்­பத்­தி­னர் அனை­வ­ரும் உடன் இருந்­த­னர்.

'ஐஎம்­கோ­யிங்­ஹோம்' திட்­டத்­தின்­கீழ் இது­வரை ஆறு நோயாளி­கள் தங்­கள் வீட்­டி­லேயே உயிர்­விடும் கடைசி ஆசை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது என்­றும் இந்­தத் திட்­டத்தை தற்போது நடைமுறைப்படுத்தும் ஒரே மருத்துவமனையாகத் திகழும் இங் டெங் ஃபோங் மருத்துவ மனை, எதிர்­காலத்­தில் இதை ஒரு வழக்­க­மான நடை­மு­றை­யா­க மேற்கொள்ள எண்­ணி­யுள்­ளது.