டிபிஎஸ் வங்கியின் லாபம் $2.57 பில்லியனுக்கு உயர்வு

டிபிஎஸ் வங்கியின் லாபம் $2.57 பில்லியனுக்கு உயர்வு

1 mins read
43f569e8-18b0-41ba-907c-4b384a7ff22d
-

டிபி­எஸ் வங்­கிக் குழு­மம் இவ்­வாண்­டின் முத­லாம் காலாண்­டில் சாதனை அள­வாக $2.57 பில்­லி­யன் நிகர லாபம் ஈட்­டி­யுள்­ளது. கடந்த ஆண்­டின் முத­லாம் காலாண்­டைக் காட்­டி­லும் இது 43 விழுக்­காடு அதி­கம்.

மேலும் 'ரிஃ பினிட்டி' ஆய்­வில், இதன் லாபம் $2.01 பில்­லி­ய­னாக இருக்­கும் என்று பகுப்­பாய்­வா­ளர்­கள் முன்­னு­ரைத்­த­தைக் காட்­டி­லும் அதிக லாபத்தை டிபி­எஸ் பதிவு செய்­துள்­ளது.

மற்­றொரு முன்­னணி வங்­கி­யான யுஓபி கடந்த வாரம் $1.5 பில்­லி­யன் நிகர லாபம் ஈட்­டி­ய­தாக அறி­வித்­தது.

கடந்த ஆண்­டைக் காட்­டி­லும் 67 விழுக்­காடு அதிக லாபத்தை அந்த வங்கி பதிவு செய்­தது.

ஓசி­பிசி வங்கி மே 10ஆம் தேதி தனது வரு­வாய் அறிக்­கையை வெளி­யிட உள்­ளது.

இதற்­கி­டையே, சில ஏற்­றத்­தாழ்­வு­கள் வந்­து­போ­னா­லும் வர்த்­தக நில­வ­ரம் தொடர்ந்து ஆரோக்­கி­ய­மான அள­வில் நீடிக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக டிபி­எஸ் வங்­கிக் குழு­மத்­தின் தலைமை நிர்­வாகி பியுஷ் குப்தா நேற்று கூறி­னார்.

அமெ­ரிக்­கா­வி­லும் ஐரோப்­பா­வி­லும் வங்­கித்­துறை வீழ்ச்­சி­யைச் சந்­தித்து வரும் நிலை­யில், டிபி­எஸ் வங்கி பாது­காப்பு மிக்­க­தா­கத் தொட­ரு­வ­தால் வங்­கி­யில் மேற்­கொள்­ளப்­படும் வைப்­புத்­தொ­கை­யின் அளவு 4 விழுக்­காடு அல்­லது $20 பில்­லி­யன் அதி­க­ரித்­துள்­ளது என்­றார் அவர்.

மார்ச் மாதம் புதி­தாக வங்­கி­யில் மேற்­கொள்­ளப்­பட்ட பணப்­பரி­வர்த்­தனை $3.6 பில்­லி­யன் என்று இரட்­டிப்­பா­னது. கடந்த ஆண்­டில் சரா­சரி மாத பரி­வர்த்­தனை $2 பில்­லி­யன் என்ற அள­வி­லேயே இருந்­தது.